7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்

இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சொனெட் எஸ்யூவி காரில் 7 இருக்கைகளை கொடுத்து கியா மோட்டார்ஸ் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற மாடல் 5 இருக்கைகளை கொண்டதாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் கூடுதலாக 125 மிமீ நீளம் பெற்றுள்ளது.

இந்திய சந்தை மாடலை விட 125 மிமீ கூடுதலாகவும், இந்தோனேசியா சந்தையில் 4120 மிமீ மாடல் 5 இருக்கையில் கிடைக்கும் நிலையில், அதே அளவில் 7 இருக்கைகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய மாடல் 4 மீட்டருக்கு குறைவாக 3995 மிமீ மட்டுமே ஆகும்.

இருக்கை அமைப்பினை பொறுத்தவரை 5 இருக்கை மாடல்களில் இரண்டாவது வரிசை இருக்கையில் மூன்றாவது வரிசை இருக்கைக்கு பின்புறமாக செல்ல இரண்டாவது இருக்கையை மடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது வரிசை இருக்கையை மடக்க முடியாது. அதனால் கூடுதலான பூட் ஸ்பேஸ் கிடைக்காது. அதே போல மூன்றாவது வரிசையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அமர ஏதுவாக இருக்கும்.

இன்டிரியரில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே வசதிகளுடன் வயர்லெஸ் போன் சார்ஜர், வென்டிலேட்டேட் முன் இருக்கைகள், எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இந்தோனேசியா சந்தையில் 115 ஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மட்டும் கிடைக்கின்றது. மற்ற இரு என்ஜின் ஆப்ஷனும் கிடைப்பதில்லை.

5 மற்றும் 7 இருக்கைகள் என இரண்டு கியா சொனெட் எஸ்யூவி காரின் உற்பத்தி ஆந்திரா மாநிலம் அனந்தப்பூர் ஆலையில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆனால், 7 இருக்கை மாடல் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வருவது சாத்தியமில்லை.

Exit mobile version