Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

கியா சிரோஸ் காரின் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்புகள்.!

ரூ.10.80 லட்சத்தில் கியா இந்தியாவின் சிரோஸ் எஸ்யூவி ஆன்-ரோடு விலை துவங்குகின்றது.

By நிவின் கார்த்தி - Editor
Last updated: 12,May 2025
Share
SHARE
Highlights
  • 120 PS பவர், 178 Nm டார்க் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது.
  • 116 PS பவர், 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனும் உள்ளது.
  • டாப் வேரியண்டில் லெவல்-2 ADAS பாதுகாப்பு வசதி உள்ளது.

கியா சிரோஸ் ஆன்-ரோடு விலை

இந்தியாவின் பிரசத்தி பெற்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள எஸ்யூவி சந்தையில் நுழைந்துள்ள கியா சிரோஸ் காரின் ஆன்-ரோடு விலை ரூ.11.46 லட்சம் முதல் துவங்கி டாப் வேரியண்ட் ரூ. 21.91 லட்சம் வரை அமைந்துள்ளது. இந்த மாடலுக்கு போட்டியாக கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV 3XO, ஸ்கோடா கைலாக் உள்ளிட்ட மாடல்களுடன் நிசான் மேக்னைட், ரெனோ கிகர், மாருதி ஃபிரான்க்ஸ், மற்றும் டொயோட்டா டைசோர் போன்றவை உள்ளது.

Kia Syros on-road price

தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டிற்கான கியா சிரோஸ் எஸ்யூவி ஆன்-ரோடு விலை பட்டியல் பின்வருமாறு;-

1.0 Turbo Petrol Engine on-Road Price
 HTK MT- Rs. 9,49,900 Rs. 11,45,653
HTK (O) MT – Rs. 10,29,900 Rs. 12,96,503
HTK+ MT- Rs. 11,79,900 Rs. 14,74,760
HTX+ MT- Rs. 13,29,900 Rs. 16,59,065
HTK+ AT- Rs. 13,09,900 Rs. 16,36,450
HTX AT- Rs. 14,59,900 Rs. 18,17,871
HTX+ AT – Rs. 15,99,900 Rs. 19,95,632
HTX+ (O) AT – Rs. 16,79,900 Rs. 20,86,098
1.5 L Diesel Engine
HTK MT – Rs. 11,29,900 Rs. 14,18,509
HTK+ MT- Rs. 12,79,900 Rs. 15,99,132
HTX MT- Rs. 14,29,900 Rs. 17,87,865
HTX+ AT- Rs. 16,99,900 Rs. 20,94,654
HTX+ (O) AT- Rs. 17,79,900 Rs. 21,90,781

கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை பட்டியலில் காப்பீடு, ஆர்டிஓ கட்டணங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆக்செரீஸ் உட்பட பல்வேறு கட்டணங்கள் தொடர்பாக கூடுதல் விலைக்கு டீலரை அனுகுங்கள்.

kia syros rear seat

எஞ்சின் மற்றும் மைலேஜ் விபரம்

சிரோஸ் காரில் உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 PS பவர், 178 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்ற மாடலின் மைலேஜ் விபரம்,6 வேக மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 18.2 கிமீ மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 17.68 கிமீ என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.

1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 116 PS பவர், 250 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்ற மாடலின் மைலேஜ், 6 வேக மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 20.75 கிமீ மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 17.65 கிமீ என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.

சிரோஸின் அனைத்து வேரியண்டிலும் பாதுகாப்பு வசதிகளில்   6 ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், பிரேக்ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், நிலைப்புத்தன்மை மேலாண்மை, ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், முன் பார்க்கிங் சென்சார்கள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், வேகத்தை உணரும் ஆட்டோ கதவு பூட்டுகள்,  முன் மற்றும் பின் அனைத்து இருக்கை 3-புள்ளி சீட் பெல்ட்கள் நினைவூட்டல், ISOFIX (பின் ஆங்கர்கள்) போன்றவை உள்ளது. டாப் HTX+ (O) ஆப்ஷனல் வேரியண்டில் 2 ADAS உடன் 16 வசதிகள் உள்ளன.

kia syros car 30 inch cluster

renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
TAGGED:Car on-road priceKiaKia Syros
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ஹோண்டா லிவோ 110
Honda Bikes
2025 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
பல்சர் 125 பைக்
Bajaj
பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
hero-xpulse-200s-4v-pro-white
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
Bajaj Freedom 125 cng
Bajaj
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved