Categories: Car News

5 வருடங்களில் 14,000 லம்போர்கினி ஹூராகேன் விற்பனை சாதனை

lamborghini huracan

லம்போர்கினி கல்லார்டோ காரினை வெற்றியை தொடர்ந்து வெளியான லம்போர்கினி ஹூராகேன் ஸ்போர்ட்டிவ் கார் அமோகமான வரவேற்பினை பெற்று வெளியிடப்பட்ட 5 வருடங்களில் 14,000 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி எண்ணிக்கை 14,000க்கு மேற்பட்டுள்ள நிலையில் 14022 சேஸ் எண் கொண்ட மாடல் கொரியாவில் விற்பனைக்கு செல்ல உள்ளது.

முந்தைய வி10 கல்லார்டோ மாடல் இந்த சாதனையை எட்டுவதற்கு 2003-2013 வரையிலான 10 ஆண்டுகாலத்தில் பெற்ற நிலையில், 2014 ஆம் ஆண்டில் வெளியான வி10 ஹராகேன் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த சாதனையை படைத்துள்ளது.

2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஆட்டோமொபிலி லம்போர்கினி மொத்தம் 4553 கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் 1211 கார்கள் மட்டும் வழங்கப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டை விட 96 % வளர்ச்சியாகும்.

சர்வதேச அளவில் லம்போர்கினி ஹூராகேன் வரிசையில் ஹூராகேன் எவோ, ஹூராகேன் எவோ ஸ்பைடர், ஹூராகேன் RWD, ஹூராகேன் RWD ஸ்பைடர், ஹூராகேன் பெர்ஃபார்மென்ட்டி,  ஹூராகேன் பெர்ஃபார்மென்ட்டி ஸ்பைடர் என பல்வேறு மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றது.

Recent Posts

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…

6 hours ago

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…

9 hours ago

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…

1 day ago

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…

1 day ago

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…

1 day ago

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…

1 day ago