Automobile Tamilan

மஹிந்திராவின் BE 6e & XEV 9e இன்று அறிமுகமாகின்றது..!

mahindra xev 9e design sketch teased

மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் Origin எஸ்யூவி என அழைக்கப்படுகின்ற XEV 9e மற்றும் BE 6e என இரண்டு மாடல்களும் இன்றும் மாலை 6 மணிக்கு அறிமுகம் செய்யப்பட்டு பல்வேறு விபரங்கள் மற்றும் அறிமுக தேதி விலை உள்ளிட்ட அனைத்தும் வெளியாக உள்ளது.

ஏற்கனவே பலமுறை டீசர் வாயிலாக பல்வேறு தகவல்களை உறுதி செய்துள்ள மஹிந்திரா நிறுவனம் ஹார்ட்கோர் டிசைன் (Heartcore Design) என்ற அடிப்படையில் இந்த மாடலை வடிவமைத்துள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை டிசைன் மற்றும் கிரியேட்டிவ் தலைவர் பிரதாப் போஸ் தெரிவித்துள்ளார்.

பிரீமியம் தோற்றம் புதிய வகையிலான வடிவமைப்பு ஆடம்பரமான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களுக்கு தனி கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இரு எஸ்யூவி மாடல்களும் 59 kWh மற்றும் 79 kWh LFP என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறுவது உறுதியாகியுள்ளது.

RWD வேரியண்டில் மோட்டார் 170Kw முதல் 210kW ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. 20-80 % சார்ஜிங் பெற 175KW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 20 நிமிடங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

BE 6e மாடலின் வடிவமைப்பின் அடிப்படை மிக முரட்டுத்தனமான ஆத்லெட்டிக் தோற்ற பொலிவுடன், ஸ்போர்ட்டிவான தன்மை மற்றும் ஏரோடைனமிக் அம்சங்களை கொண்டு மிகசிறப்பான செயல்திறனை வழங்கும் மாடலாகும்.

அடுத்து,எஸ்யூவி கூபே வடிவத்தினை பெறுகின்ற XEV 9e மாடலிலும் நுட்பம் மற்றும் செயல்திறன் மற்றும் ஆடம்பர வசதிகளின் வெளிப்பாடாகும், முழுமையான விபரங்களை விரைவில் அறிந்து கொள்ளலாம்.

Exit mobile version