வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள ஐந்து கதவுகளை கொண்ட தார் அர்மடா எஸ்யூவி (Thar Armada) காரின் உற்பத்தி நிலை படங்கள் தற்போது இந்த காரைப் பற்றி சில முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
தார் அர்மடாவில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், AWD வேரியண்டுகளுக்கு 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் கூடுதலாக 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை பெறுவதுடன் மூன்று என்ஜினிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் பெற உள்ளது.
விற்பனையில் கிடைக்கின்ற மூன்று கதவுகளை கொண்ட தார் எஸ்யூவி காரில் இருந்து வேறுபட்டதாக அமைந்திருக்கும் வகையிலான முன் பக்கத்தை தற்பொழுது பெற்றதாக சில படங்கள் காட்சிக்கு கிடைத்திருக்கின்றன மற்றும் பக்கவாட்டில் சற்று நீளமான தோற்ற அமைப்பினை வெளிப்படுத்துகின்றது.
மூன்று டோர் மாடலை விட கூடுதலான வீல் பேஸ் கொண்டிருக்கும் வகையில் வடிக்கப்பட்டிருக்கின்ற தார் அர்மடாவில் லேடர் ஃபிரேம் சேஸ் நீளம் அதிகரிக்கப்பட்டு இருக்கலாம்.
அர்மடாவில் 6 ஏர்பேக்குகள் உட்பட Level 2 ADAS பாதுகாப்பு தொகுப்பு கொண்டிருக்கலாம். கூடுதலாக கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி லைட்டுகள், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் மாறுபட்ட டிசைன் பெற்ற அலாய் வீல் கொண்டிருக்கலாம்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள மஹிந்திரா தார் அர்மடா எஸ்யூவிக்கு போட்டியாக மாருதி சுசூகி ஜிம்னி உள்ளது.
imagesource — youtube.com/RAJIT-yy9gr
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…