Automobile Tamilan

ரூ.12.99 லட்சத்தில் மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

Mahindra Thar ROXX red

மஹிந்திரா நிறுவனத்தின் ஐந்து கதவுகளை பெற்ற தார் ராக்ஸ் எஸ்யூவி மாடலின் பெட்ரோல் எஞ்சின் ஆரம்ப விலை ரூ.12.99 லட்சத்திலும், டீசல் எஞ்சின் உள்ள மாடலின் ஆரம்ப விலை ரூ.13.99 லட்சத்திலும் துவங்குகின்றது.

இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் இன்ஜின் பெற்று இருக்கின்ற இந்த மாடலின் முழுமையான இன்ஜின் தொழில் நுட்ப விபரங்கள் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் மற்ற விபரங்கள் தற்பொழுது கிடைத்திருக்கின்றன.

ஆரம்ப நிலை MX1 மாடல் இன்று 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 160 hp பவர் மற்றும் 330 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 150 hp பவர் மற்றும் 330 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

ஆரம்ப நிலை MX1 வேரியண்டில் எல்இடி லைட்டிங், டூயல் டோன் நிறம், 18-இன்ச் ஸ்டீல் வீல், 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், டிரைவரின் இருக்கை உயரம் சரிசெய்தல், 60:40 ஸ்பிலிட் ஃபோல்டிங் ரியர் பெஞ்ச் இருக்கைகள், பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் பின்புற USB-C போன்றவை இடம்பெற்றுள்ளன.

கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 6 ஏர் பேக்குகள்,  எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், மூன்று புள்ளி சீட் பெல்ட் அனைத்து இருக்கைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

டாப் வேரியண்டில் உயரமான வீல் ஆர்ச் வீல் டூயல் நிறத்தை கொண்ட ஸ்டைலான 19-இன்ச் டயமண்ட்-கட் அலாய் வீல் பெறுகிறது, அதே நேரத்தில் நடுத்தர வகைகளில் 18-இன்ச் அலாய் கிடைக்கும்.

Thar ROXX image gallery

Exit mobile version