முன்பாக அறிமுகம் செய்யப்பட்ட தார்.e அடிப்படையிலான மஹிந்திரா Vision SXT பிக்கப் டிரக்கினை மிகவும் முரட்டுத்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் விற்பனைக்கு ICE மற்றும் EV என இரண்டிலும் 2028-2029க்குள் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பின்புறத்தில் பெரிய அளவிலான லோடிங் பகுதி கொடுக்கப்படாமல் சிறிய அளவில் வழங்கப்பட்டு இரண்டு ஆஃப் ரோடு டயர்கள் இடம்பெற்று மிக நேர்த்தியான எல்இடி டெயில் விளக்கு, உயரமான பம்பர் அமைபுடன் மேற்கூரையில் ரூஃப் ஸ்பாய்லர் உள்ளது.
பக்கவாட்டில் தார் ராக்ஸ் சார்ந்த வடிவமைப்பினை கொண்டு அனைத்து நிலப்பரப்புக்கும் ஏற்ற டயர்கள், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், பாடி கிளாடிங் சற்று உயரமாக வழங்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் முரட்டுத் தனமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையிலான பிக்சல் வடிவ இரட்டை புரொஜெக்டர் ஹெட்லைட், டர்ன் இன்டிகேட்டர்கள் உள்ளன, இவை அனைத்தும் ஒரு சதுர ஹவுசிங்கில் அமைக்கப்பட்டிருக்கும்.
பானட்டில் ஆக்ரோஷமான வடிவத்தை கொண்டு மேட் கருப்பு நிறத்தில் கிரில் அமைப்பு உள்ளது. இன்டீரியரில் விஷன் டி மாடலை போல 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் டூயல் டோன் டேஸ்போர்டினை பெற்று 5 இருக்கைகளை கொண்டு பெரிய செங்குத்து தொடுதிரை டிஸ்பிளே வழங்கப்பட்டு, டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் அமைந்திருக்கின்றது.
SXT NU IQ தளத்தில் வடிவமைக்கப்பட்டு 3,990 மிமீ முதல் 4,320 மிமீ வரை நீளம் கொண்டு, இது 937 மிமீ வரை இரண்டாவது வரிசை கால்களுக்கான அறை மற்றும் 1,404 மிமீ தோள்பகுதிக்கான இடைவெளி மற்றும் 227 மிமீ வரை கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதவிர மஹிந்திரா நிறுவனம் விஷன் எக்ஸ், விஷன் டி மற்றும் விஷன் எஸ் ஆகியவற்றை இன்றைக்கு வெளியிட்டுள்ளது.