மஹிந்திரா & மஹிந்திரா இன்றைக்கு Vision X எஸ்யூவி கான்செப்டினை அறிமுகம் செய்துள்ள நிலையில், இதன் வடிவமைப்பினை அடிப்படையாக கொண்ட மாடல் 2027ல் வரவுள்ளது. 2027-2030 வரையிலான காலகட்டத்தில் வரவுள்ள விஷன் S, விஷன் T, விஷன் SXT ஆகியவற்றை அறிமுகம் செய்ய உள்ளது.
ஆக்ரோஷமான ஸ்போர்ட்டிவ் டிசைனை பெற்று ஏரோடைனமிக்ஸ் உடன் கூடிய விஷன் எக்ஸ் கான்செப்ட்டில் மிக உயரமான தோற்றத்தை வெளிப்படுத்துவதுடன் மிக மெலிதான எல்இடி லைட்டிங் கொடுக்கப்பட்டு, முன்புற கிரில் அமைப்பு என அனைத்தும் நவீனத்துவமாக அமைந்துள்ளது.
மஹிந்திராவின் ட்வின் பீக்ஸ் லோகோ பெற்று உயரமான வீல் ஆரச் பாடி கிளாடிங், இரட்டை வண்ண 19 அங்குல அலாய் வீல் டிசைனை பேனல்கள் என அனைத்திலும் மிக ஸ்டைலிஷாக அமைந்துள்ளது. பின்புறத்தில் மிகவும் அகலமான பம்பர் மற்றம் எல்இடி டெயில் விளக்கு பெற்றுள்ளது.
NU.IQ platform ( New Flexible Architecture) வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலில் எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல், ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் முறையிலும் தயாரிக்கப்படவும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்டீரியர் தொடர்பாக தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், லெவல்-2+ ADAS, மற்றும் OTA ஆகியவற்றை பெறக்கூடும், விற்பனைக்கு 2027 ஆம் ஆண்டு வரவுள்ளதால் 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள சந்தையில் கிடைக்கின்ற XUV 3XO மாடலின் புதிய தலைமுறையாக 2027 மத்தியில் சந்தைக்கு வரக்கூடும்.
Vision X புகைப்படங்கள்