Automobile Tamilan

XEV 9e காரின் டாப் வேரியண்ட் விலையை வெளியிட்ட மஹிந்திரா

mahindra xev 9e suv dashboard

வரும் மார்ச் மாதம் விநியோகம் தொடங்கப்பட உள்ள புதிய மஹிந்திராவின் எலெக்ட்ரிக் XEV 9e காரின் டாப் வேரியண்டின் விலை ரூபாய் 30.50 (எக்ஸ்ஷோரூம்) அறிவிக்கப்பட்டிருக்கின்றத. ஏற்கனவே ஆரம்ப நிலை வேரியண்டின் விலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக டாப் வேரியண்டு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது மற்ற வேரியண்டு விலை அறிவிக்கப்படவில்லை.

வரும் பிப்ரவரி 14 முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ள எக்ஸ்இவி 9இ 79Kwh Pack Three டெலிவரி மார்ச் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது, மற்ற மாடலுக்கான முன்பதிவு மற்றும் டெலிவரி விபரங்கள் தற்பொழுது அறிவிக்கப்படவில்லை.

தற்பொழுது வரை வெளிவந்த XEV 9e விலை பட்டியல்.,

ஆனால் வீட்டிலே சார்ஜ் செய்வதற்கான சார்ஜருக்கு மற்றும் பொருத்துவதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என மஹிந்திரா குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து பிஇ 6 போலவே இந்த மாடலுக்கும், முதல் உரிமையாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பேட்டரி வாரண்டி வழங்கப்படும் என மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இரண்டாவது உரிமையாளர் என்றால் வாரண்டி 10 ஆண்டுகள் அல்லது 2 லட்சம் கிமீ ஆக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

59kWh வேரியண்ட் 231hp பவர் மற்றும் 380Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் ரேஞ்ச் 542 கிமீ (ARAI) ஆகவும், டாப் 79kWh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் 286hp பவர் மற்றும் 380Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 656Km (ARAI) அல்லது 533km ரேஞ்ச் (WLTP) வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version