மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்.யு.வி விபரம் வெளியானது

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மஹிந்திரா S201 என அறியப்பட்ட எஸ்.யு.வி மாடலின் பெயர் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்.யு.வி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி XUV500 மாடலின் அடிப்படையாக கொண்ட மினியேச்சர் போல காட்சியளிக்கின்றது. #MahindraXUV300 #S201

சிறுத்தையின் தோற்ற உந்துதலில் வடிவமைக்கப்பட்டதாக அறியப்பட்ட  XUV500 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள XUV300 தோற்றம் பெரும்பாலும் எக்ஸ்யூவி500 பெற்றிருந்தாலும் நவீனத்துவத்துக்கு ஏற்ப சில மாறுதல்களுடன் அதிகப்படியான நன்மைகளை கொண்டு விளங்குகின்றது.

மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் சாங்யாங் நிறுவனத்தின் ரெக்ஸ்டான் அடிப்படையில் சமீபத்தில் வெளியான அல்டுராஸ் எஸ்யூவி மாடலை தொடர்ந்து , இந்நிறுவனத்தின் சாங்யாங் டிவோலி பிளாட்பாரத்தில், இந்திய சந்தைக்கு ஏற்றபடி வடிவமைகப்பட்டுள்ள எக்ஸ்யூவி300 காரில் அசத்தலான இன்டிரியர் அமைப்புடன், மிக நேர்த்தியான டிசைனிங் மற்றும் நவீன தலைமுறையினர் விரும்பும் பல்வேறு வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. குறிப்பாக 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற்றதாக வந்துள்ள இந்த மாடலில் இடம்பெற உள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புளூடூத் தொடர்பு, வாய்ஸ் கமான்ட், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் அமைந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு தேர்வுகளில் கிடைக்க உள்ள இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இரு என்ஜினிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

புராஜெக்டர் விளக்கு, எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், சன்ரூஃப், எல்இடி டெயில் லைட், 17 அங்குல அலாய் வீல் உள்ளிட்ட வசதிகளுடன் மிக நேர்த்தியான இருக்கை அமைப்புடன், எக்ஸ்யூவி300 பாரத் கிராஷ் டெஸ்ட் (Bharat New Vehicle Safety Assessment Program -BNVSAP) தரத்துக்கு ஏற்றதாகவும், டாப் வேரியன்டில் 7 காற்றுப்பைகள், ஏபிஎஸ் , இபிடி போன்றவற்றை பெற்றதாக விளங்கும்.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹோண்டா WR-V, ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் நிசான் கிக்ஸ் உள்ளிட்ட மாடல்களை நேரடியாக மஹிந்திரா XUV300 எதிர்கொள்ள உள்ள எஸ்யூவி பிப்ரவரி மாத மத்தியில் விற்பனைக்கு உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்.யு.வி விலை ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் விலையில் விற்பனைக்கு வரக்கூடும்.