மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான எக்ஸ்யூவி 700 எஸ்யூவி காருக்கான விலையை அதிகபட்சமாக ரூ.2.20 லட்சம் வரை AX7 வேரியண்டுக்கு மட்டும் குறைத்து தற்காலிகமாக மஹிந்திரா அறிவித்துள்ளது. சமீபத்தில் 33 மாதங்களுக்குள் இரண்டு லட்சத்திற்கும் கூடுதலான எஸ்யூவிகளை உற்பத்தி செய்து சாதனை படைத்திருந்த நிலையில் அதனை கொண்டாடும் வகையில் ஜூலை 10 ஆம் தேதி முதல் துவங்குகின்ற இந்த சிறப்பு சலுகை ஆனது அடுத்த நான்கு மாதங்களுக்கு மட்டும் கிடைக்க உள்ளது.
AX7 வேரியண்டில் உள்ள 16 வகைகளில் பெட்ரோல் மட்டுமல்லாமல் டீசல் என இரு ஆப்ஷனிலும் 6 மற்றும் 7 இருக்கைகளை பெற்று ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படுகின்றது.
197hp பவர் மற்றும் 380 Nm டார்க் வெளிப்படுதும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. மேனுவல் மாடல் 153 hp பவர், 420 Nm டார்க் உடன் அடுத்து 6 வேக ஆட்டோமேட்டிக் 182 hp பவர், 450 Nm டார்க் ஆனது 2.2 லிட்டர் டீசல் என்ஜின் என இருவிதமான பவர் ஆப்ஷனை கொண்டுள்ளது.
Mahindra XUV700 Variant | New Price (Ex-showroom) | Old Price (Ex-showroom) | Price Difference |
AX7 7-Seat Petrol MT | Rs 19.49 lakh | Rs 21.39 lakh | Rs 1.90 lakh |
AX7 6-Seat Petrol MT | Rs 19.69 lakh | Rs 21.54 lakh | Rs 1.85 lakh |
AX7 7-Seat Diesel MT | Rs 19.99 lakh | Rs 22.14 lakh | Rs 2.15 lakh |
AX7 6-Seat Diesel MT | Rs 20.19 lakh | Rs 22.14 lakh | Rs 1.95 lakh |
AX7 7-Seat Petrol AT | Rs 20.99 lakh | Rs 22.99 lakh | Rs 2.00 lakh |
AX7 6-Seat Petrol AT | Rs 21.19 lakh | Rs 23.24 lakh | Rs 2.05 lakh |
AX7 7-Seat Diesel AT | Rs 21.59 lakh | Rs 23.79 lakh | Rs 2.20 lakh |
AX7 6-Seat Diesel AT | Rs 21.79 lakh | Rs 23.94 lakh | Rs 2.15 lakh |
AX7 L 7-Seat Diesel MT | Rs 22.49 lakh | Rs 23.99 lakh | Rs 1.50 lakh |
AX7 L 6-Seat Diesel MT | Rs 22.69 lakh | Rs 24.24 lakh | Rs 1.55 lakh |
AX7 7-Seat Diesel AWD AT | Rs 22.80 lakh | Rs 24.99 lakh | Rs 2.19 lakh |
AX7 L 7-Seat Petrol AT | Rs 23.49 lakh | Rs 25.39 lakh | Rs 1.90 lakh |
AX7 L 6-Seat Petrol AT | Rs 23.69 lakh | Rs 25.54 lakh | Rs 1.85 lakh |
AX7 L 7-Seat Diesel AT | Rs 23.99 lakh | Rs 26.04 lakh | Rs 2.05 lakh |
AX7 L 6-Seat Diesel AT | Rs 24.19 lakh | Rs 25.99 lakh | Rs 1.80 lakh |
AX7 L 7-Seat Diesel AWD AT | Rs 24.99 lakh | Rs 26.99 lakh | Rs 2.00 lakh |
இந்த சலுகை குறிப்பிட்டப்பட்ட அடுத்த 4 மாதங்களுக்கு மட்டும் கிடைக்கின்ற நிலையில் இந்த வேரியண்டில் Level 2 ADAS பாதுகாப்பு தொகுப்பு, டிஜிட்டல் கிளஸ்ட்டர், 10.24 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கின்றது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…