கடந்த சில மாதங்களாக கிடைக்காத இருந்த சிஎன்ஜி மாடலை மீண்டும் கிராண்ட் விட்டாரா காரின் டெல்டா மற்றும் ஜெட்டா என இரு வகையிலும் விற்பனைக்கு ரூ.13,48,000 முதல் ரூ.15,62,000 எக்ஸ்-ஷோரூம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2025 கிராண்ட் விட்டாரா சில மாதங்களுக்க முன்னர் அடிப்படையான 6 ஏர்பேக் பாதுகாப்புடன் கூடுதலாக சில மேம்பட்ட வசதிகளை பெற்றதாக வெளியான நிலையில், தற்பொழுது கூடுதலாக சிஎன்ஜி முறையிலும் கிடைக்கின்றது.
1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 103hp மற்றும் 136.8Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 2WD மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் இரண்டும் கிடைக்கின்றது. ஆனால் சிஎன்ஜி மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று 89hp மற்றும் 121.5Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் மைலேஜ் 26.6km/kg என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெட்டா டாப் வேரியண்டில் 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் வசதியுடன் ரிவர்ஸ் கேமரா, சாவி இல்லாத நுழைவு மற்றும் கனெக்டேட் கார் அம்சங்கள் ஆட்டோ பியூரிஃபைர் வசதி, கிளாரியன் பிரீமியம் சவுண்ட் சிஸ்டத்தை பெற்று வயர்லெஸ் சார்ஜிங் டாக் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் பின்புற கதவு சன்ஷேட்கள். R17 அலாய் வீல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவற்றை பெற்றுள்ளது.