Categories: Car News

மாருதி சுசூகி அறிவித்த அதிரடி விலை குறைப்பு சலுகைகள்

maruti suzuki brezza 1

மாருதி சுசுகி நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக ஜிம்னி காருக்கு ரூபாய் 1.50 ஆயிரம் வரை சலுகையை அறிவித்துள்ளது பலேனோ, ஆல்டோ, ஸ்விஃப்ட் உட்பட பல்வேறு மாடல்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன அவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் டீலர் மற்றும் ஸ்டாக் இருப்பு உள்ளிட்ட காரணங்களை கொண்டு மாறுபடலாம்.

மாருதி சுசூகி நெக்ஸா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகின்ற பலேனோ, இக்னிஸ், கிராண்ட் விட்டாரா, ஜிம்னி சியாஸ், XL6 போன்ற மாடல்களின் சலுகைகளை அறிந்து கொள்ளலாம்.

  • XL6 எம்பிவிக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆக ரூபாய் 20 ஆயிரம் வரை வழங்கப்படுகின்றது.
  • பலேனோ மற்றும் சியாஸ் காருக்கு அதிகபட்ச சலுகை ரூ.53,000 அறிவிக்கப்பட்டு  எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரொக்க தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படும்.
  • இக்னிஸ் காருக்கு அதிகபட்ச சலுகை ரூ.58,000 அறிவிக்கப்பட்டு  எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.15,000, ரொக்க தள்ளுபடி ரூ.40,000 வரையும், கார்ப்பரேட் போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படும்.
  • கிராண்ட் விட்டாராவுக்கு அதிகபட்ச சலுகை ரூ.79,000 அறிவிக்கப்பட்டு  எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.50,000, ரொக்க தள்ளுபடி ரூ.25,000 வரையும், கார்ப்பரேட் போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
  • மாருதியன் ஃபிரான்க்ஸ் காருக்கு 68,000 சலுகை கிடைக்கின்றது.
  • ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற ஜிம்னி எஸ்யூவி MY2023 இருப்பில் உள்ளவைக்கு ரூ.1.50 லட்சம், மற்றும் MY2024 மாடலுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

மாருதி சுசுக்கி அரேனா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகின்ற ஆல்டோ 800, K10 எஸ்பிரஸ்ஸோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசையர் கார்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

  • இந்தியாவின் குறைந்த விலை கார்களில் ஒன்றான ஆல்டோ கே10 மாடலுக்கு ரூபாய் 57 ஆயிரம் முதல் ரூபாய் 62 ஆயிரம் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன கூடுதலாக சிஎன்ஜி வேரிண்டுகளுக்கு ரூ. 42,000 சலுகைகள் கிடைக்கின்றன.
  • அடுத்து செலிரியோ காருக்கு ரூபாய் 56 ஆயிரம் மரங்கள் ரூபாய் 61 ஆயிரம் வரை சலுகைகள் கிடைக்கும்.
  • மாருதி எஸ்பிரெஸ்ஸோவுக்கு ரூபாய் 46 ஆயிரம் முதல் ரூபாய் 61 ஆயிரம் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன.
  • இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற மாருதி வேகன் ஆர் மாடலுக்கு ரூபாய் 56 ஆயிரம் முதல் ரூபாய் 61 ஆயிரம் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன கூடுதலாக சிஎன்ஜி வேரிண்டுகளுக்கு ரூ. 36,000 சலுகைகள் கிடைக்கின்றன.
  • ஸ்விஃப்ட் மாடலுக்கு ரூ.42,000, டிசையருக்கு ரூ.37,000 வரை உள்ளது.
  • இறுதியாக மாருதி ஈக்கோ காருக்கு ரூ.29,000 சலுகை உள்ளது.

மாருதி பிரஸ்ஸா, இன்விக்டோ, மற்றும் எர்டிகா போன்ற மாடல்களுக்கு எந்த ஒரு சலுகையும் அறிவிக்கப்படவில்லை.

Recent Posts

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…

5 hours ago

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…

8 hours ago

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…

1 day ago

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…

1 day ago

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…

1 day ago

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…

1 day ago