Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

மாருதி சுசூகியின் ”இ விட்டாரா” பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை..!

மார்ச் மாதம் வரவுள்ள மாருதி சுசூகி இ விட்டாரா விலை ரூ.18 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

By ராஜா
Last updated: 28,January 2025
Share
SHARE
Highlights
  • இ விட்டாரா காரில் 49kWh மற்றும் 61kWh என இரு பேட்டரி ஆப்ஷன் உள்ளது.
  • டாப் 61kWh பேட்டரி மாடல் 500 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம்.
  • விற்பனைக்கு மார்ச் மாதம் இ விட்டாரா வெளியிடப்பட உள்ளது

maruti suzuki e Vitara suv 1

வரும் மார்ச் மாதம் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுசுகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி இ விட்டாரா காரில் இடம் பெறப் போகின்ற முக்கிய வசதிகள் மற்றும் பல்வேறு விபரங்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ள இ விட்டாராவில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனைப் பெற்று 10 விதமான நிறங்களுடன் பல்வேறு நவீனத்துவமான வசதிகள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு லெவல் 2 அடாஸ் போன்றவற்றை பெற உள்ளது.

இ விட்டாரா காரில் நெக்ஸா ப்ளூ, ஸ்ப்ளெண்டிட் சில்வர், ஆர்க்டிக் ஒயிட், கிராண்டியர் கிரே, ப்ளூயிஷ் பிளாக் மற்றும் ஓபுலண்ட் ரெட் என 6 ஒற்றை வண்ணத்துடன் கூடுதலாக டூயல் டோன் வண்ணங்களில் மேற்கூறை கருப்பு நிறத்துடன் ஆர்க்டிக் ஒயிட், லேண்ட் ப்ரீஸ் கிரீன், ஸ்ப்ளெண்டிட் சில்வர் மற்றும் ஓபுலண்ட் ரெட் என நான்கு நிறங்களை பெற்றுள்ளது.

Maruti Suzuki e Vitara

e Vitara எலெக்ட்ரிக் காரில் பிஓய்டி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட பிளேட் செல்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 49kWh மற்றும் 61kWh என இருவிதமான பேட்டரி ஆப்ஷனை பெறுவது உறுதி செய்யப்பட்டாலும், தற்பொழுது வரை ரேஞ்ச் தொடர்பாக எந்த தகவலையும் மாருதி உறுதிப்படுத்தவில்லை.

FWD வேரியண்ட் 49kwh பேட்டரி பெற்று 144 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், 61Kwh பேட்டரி பெறும் FWD வேரியண்ட் 174 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், AWD டிரைவ் பெற்ற 61 kWh பேட்டரி மாடல் 184 PS பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்த டூயல் மோட்டாருடன் வரக்கூடும். ஆனால் இ விட்டாராவின் ஆல் வீல் டிரைவ் கொண்ட வேரியண்ட் இந்திய சந்தைக்கு மிகவும் தாமதமாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் டாப் 61Kwh பேட்டரி பெறும் FWD பெறுகின்ற மாடல் நிகழ்நேரத்தில் 500 கிமீ ரேஞ்ச் வழங்கலாம் என கூறப்படுகின்றது.

maruti suzuki e Vitara interior

குறிப்பாக மாருதி சுசூகி எலெக்ட்ரிக் வாகனங்களை நெக்ஸா மூலம் விற்பனை செய்ய உள்ள நிலையில் பிரத்தியேகமான ‘e for Me’ என்ற திட்டத்தின் மூலம் விரைவு சார்ஜிங் நெட்வொர்க், சிறந்த சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் பல்வேறு இவி தொடர்பான சேவைகளை சிறந்த முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

4,275மிமீ நீளம், 1,800மிமீ அகலம் மற்றும் 1,640மிமீ உயரம் கொண்டுள்ள இ விட்டாரா காரின் வீல்பேஸ் 2700 மிமீ ஆக உள்ள நிலையில் மிகவும் தாராளமான இடவசதியுடன் இன்டீரியரில் மிதக்கும் வகையிலான 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் கன்சோல் திரை ஆனது 10.1-இன்ச் வழங்கப்பட்டு இரண்டு-ஸ்போக் பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல்,வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, இன்ஃபினிட்டி, பை ஹார்மன் ஆடியோ சிஸ்டம், காருக்குள் இணைப்பு தொழில்நுட்பம், ஒற்றை மண்டல தானியங்கி ஏசி, PM 2.5 ஏர் ஃபில்டர் மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள் முக்கிய வசதிகளாக பார்க்கப்படுகின்றுது.

இ விட்டாரா பாதுகாப்பு அம்சங்கள்

காரின் பேட்டரி மிக சிறப்பான கட்டுமானத்திற்குள் பாதுகாப்பானதாக இருப்பதுடன் அடிப்படையாக 7 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர், 360-டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குடன் ஆட்டோ ஹோல்டு வசதியும் உள்ளது.

maruti suzuki e Vitara rear

renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
TAGGED:Maruti Suzuki e Vitara
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ஜிக்ஸர் SF 250
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
ஹோண்டா ஷைன் 125 பைக்
Honda Bikes
ஹோண்டா ஷைன் 125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
சூப்பர் மீட்டியோர் 650
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
hero xoom 125 on road price
Hero Motocorp
ஹீரோ ஜூம் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms