Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி eவிட்டாரா அறிமுகமானது

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 4,November 2024
Share
1 Min Read
SHARE

maruti suzuki e Vitara suv

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் eVX முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடலுக்கு இவிட்டாரா என பெயரிடப்பட்டு 49kwh அல்லது 61kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் ஆனது வழங்கப்படுகின்றது சர்வதேச அளவில் ஐரோப்ப சந்தையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் ஆனது இந்திய சந்தைக்கு ஏற்ற மாடல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுசூகியின் Heartect-e பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலில் FWD வேரியண்ட் 49kwh பேட்டரி பெற்று 144 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், 61Kwh பேட்டரி பெறும் FWD வேரியண்ட் 174 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், AWD டிரைவ் பெற்ற 61 kWh பேட்டரி மாடல் 184 PS பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்த டூயல் மோட்டார்  உள்ளது.

BYD நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட Blade செல் Lithium iron phosphate batteries (LFP) 49 மற்றும் 61 kWh பேட்டரி பேக்கின் அதிகாரப்பூர்வ ரேஞ்ச் விபரங்கள் தற்பொழுது எதுவும் வெளியிடப்படவில்லை.

சுசூகி இவிட்டாராவின் நீளம் 4,275 மிமீ, அகலம் 1,800 மிமீ மற்றும் உயரம் 1,635 மிமீ கொண்டுள்ள நிலையில் 2,700 மிமீ வீல்பேஸ் பெற்று ஆல் வீல் டிரைவ் வேரியண்டில் 225/50 R19 டயரும், FWD வேரியண்டில் 225/55 R18 பெற்றுள்ள நிலையில் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் வீல் பெற்றுள்ளது.

இன்டீரியரை பொறுத்தவரை ட்வின் ஸ்போக் பிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு  பிரஷ்டு செய்யப்பட்ட சில்வர் சுற்றுகளுடன் கூடிய செவ்வக வடிவிலான ஏசி வென்ட்கள், ரோட்டரி டிரைவ் ஸ்டேட் செலக்டர் மற்றும் பார்ட் ஃபேப்ரிக், பார்ட் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றுடன் ஃபிசிக்கல் ஏசி கன்ட்ரோல் கொண்டுள்ளது.

maruti suzuki e Vitara suv
maruti suzuki e Vitara side
maruti suzuki e Vitara cabin
maruti suzuki e Vitara interior
maruti suzuki e Vitara rear
fiat remove grey paint
ஃபியட் கார்களில் இனி இந்த நிறத்தில் கார்கள் வராது ? ஏன் தெரியுமா ?
அக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ
இந்தியாவில் மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி இன்று அறிமுகம்
₹ 21.25 லட்சம் ஆரம்ப விலையில் எம்ஜி ஹெக்டர் பிளாக்ஸ்ட்ராம் விற்பனைக்கு வந்தது
டாக்சி சந்தைக்கு மஹிந்திரா KUV100 ட்ரிப் விற்பனைக்கு வந்தது
TAGGED:Maruti Suzuki e VitaraMaruti Suzuki eVX EV
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 tvs apache rtr 310
TVS
2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Honda CB350 H'ness on-road price
Honda Bikes
2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
KTM 160 Duke onroad price
KTM bikes
கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved