Categories: Car News

விலை உயரந்த மாருதி சுசூகி என்கேஜ் எம்பிவி அறிமுக தேதி வெளியானது

maruti suzuki engage mpv details

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின்  அடிப்படையில் மாருதி சுசூகி என்கேஜ் எம்பிவி கார் 2023 ஜூலை 5 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ளது. நெக்ஸா டீலர்கள் வழியாக ஹைபிரிட் மாடலாக விற்பனை செய்யப்படலாம்.

சமீபத்தில் என்கேஜ் காரின் முகப்பு தோற்றம் வெளியானதை தொடர்ந்து கிராண்ட் விட்டாரா காரில் உள்ளதை போன்ற கிரிலை கொண்டு மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லாமல் வரவுள்ளது.

Maruti Engage MPV

என்கேஜ் எம்பிவி காரில் 172 hp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 184 hp பவர் வழங்கும் 2.0 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு இன்ஜின்களும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் – CVT கியர்பாக்ஸ் பெற்று மட்டுமே வருகின்றது.

இன்னோவா ஹைக்ராஸ் ஹைபிரிட் மைலேஜ் 23.24kpl மற்ற சாதாரன என்ஜின் மைலேஜ் 16.13kpl என உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காருக்கு அதிகப்படியான முன்பதிவை பெற்றுள்ளதால் தற்காலிகமாக முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளது.