Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

சிஎன்ஜி மாருதி ஃபிரான்க்ஸ் விற்பனைக்கு வெளியானது

By MR.Durai
Last updated: 12,July 2023
Share
SHARE

maruti-suzuki-fronx-cng-launched

மாருதி சுசூகி நிறுவனம் சிஎன்ஜி பொருத்தப்பட்ட ஃபிரான்க்ஸ் மாடலை ₹ 8.42 லட்சம் ஆரம்ப விலை முதல் ₹ 9.27 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிஎன்ஜி பெறுகின்ற மாருதி நிறுவனத்தின் 15வது மாடலாக ஃபிரான்க்ஸ் விளங்குகின்றது.

பெட்ரோல் காரை விட ரூ.95,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ள பிரான்க்ஸ் மாடலில் சிஎன்ஜி பயன்முறையில் சிக்மா மற்றும் டெல்டா என இருவிதமான வேரியண்டுகள் கிடைக்கின்றது.

Maruti Suzuki Fronx

ஃபிரான்க்ஸ் காரில் இடம்பெற்றுள்ள என்ஜின் ஆப்ஷன் 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp குதிரைத்திறன் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டையும் பெறுகின்றது.

அதிக்கப்படியான பவரை வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் (மைல்டு ஹைபிரிட்) 100 PS பவர் மற்றும் 148 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெறுகின்றது.

தற்பொழுது வந்துள்ள சிஎன்ஜி வேரியண்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை அடிப்படையாக கொண்டு  77.5hp பவர் மற்றும் 98.5Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே பெற்றுள்ளது.

மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் சிஎன்ஜி மைலேஜ் 28.51km/kg ஆகும்.

தோற்ற அமைப்பு, இன்டிரியர் வசதிகள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை. விற்பனையில் உள்ள பெட்ரோல் காரை போலவே அமைந்திருக்கின்றது.

Fronx Sigma CNG – ₹ 8.42 லட்சம்

Fronx Delta CNG – ₹ 9.28 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
TAGGED:Maruti Suzuki Fronx
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 சுசூகி ஜிக்ஸர் 250
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
hero hf deluxe pro on road price
Hero Motocorp
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved