₹ 7.47 லட்சத்தில் மாருதி சுசூகி Fronx கார் விற்பனைக்கு வந்தது

கிராஸ்ஓவர் ரக மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய மாருதி சுசூகி Fronx காரின் ஆரம்ப விலை ₹ 7.36 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக ₹ 13.13 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

சுசூகி Fronx காரில் 1.2 லிட்டர் என்ஜின் மாடல் ₹ 7.46 லட்சம் முதல் ₹ 9.27 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. அடுத்து உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மாடல் ₹ 9.72 லட்சம் முதல் ₹ 13.13 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி Fronx கார்

விற்பனையில் உள்ள பலேனோ காரில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள Fronx கார் சுசூகியின் ஹார்டெக்ட் ஃபிளாட்ஃபாரத்தில் மிக நேர்த்தியான பம்பரினை கிராண்ட் விட்டாரா காரிலிருந்து பெறப்பட்ட பம்பர், முன்புற பம்பருடன் மிக நேர்த்தியான கிரில் அமைப்பு, ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் மற்றும் உயரமான வீல் ஆர்சு பெற்றதாக அமைந்துள்ளது.

ஃபிரான்க்ஸ் காரில் இடம்பெற்றுள்ள குறைந்த பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp பவர் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. கியர்பாக்ஸ் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டையும் பெறுகின்றது.

பவர்ஃபுல்லான 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் (மைல்டு ஹைபிரிட்) 100 PS பவர் மற்றும் 148 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெறும்.

மாருதி Fronx Mileage

மாருதி ஃபிரான்க்ஸ் மைலேஜ் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் லிட்டருக்கு 21.79 kmpl  மற்றும் AMT கியர்பாக்ஸ் பெற்ற மாடல் 22.89 kmpl வரை வழங்குகிறது; 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பெற்ற மேனுவல் கியர்பாக்ஸுடன் 21.5 kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 20.01 kmpl வழங்குகிறது.

மாருதி ஃபிரான்க்ஸ காருக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லை என்றால், விலை அமைவதனை பொருத்து, மாருதி பிரெஸ்ஸா, நிசான் மேக்னைட், ரெனோ கிகர், சிட்ரோன் C3, டாடா பஞ்ச், ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா XUV300 மற்றும் கியா சோனெட் ஆகியவற்றை எதிர்கொள்ளும்.

MARUTI SUZUKI FRONX PRICE (EX-SHOWROOM)
1.2 petrol MT 1.2 petrol AMT 1.0 turbo MT 1.0 turbo AT
Sigma Rs 7.47 lakh
Delta Rs 8.33 lakh Rs 8.88 lakh
Delta+ Rs 8.73 lakh Rs 9.28 lakh Rs 9.73 lakh
Zeta Rs 10.56 lakh Rs 12.06 lakh
Alpha Rs 11.48 lakh Rs 12.98 lakh
Alpha DT Rs 11. 64 lakh Rs 13.14 lakh

(எக்ஸ்ஷோரூம் இந்தியா)

This post was last modified on April 24, 2023 1:35 PM

Share