Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

மாருதி ஜிம்னி எஸ்யூவி அறிமுகம் எப்பொழுது ?

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 10,April 2023
Share
3 Min Read
SHARE

maruti Jimny suv

2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியான மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி காருக்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வரும் மே மாத முதல் வாரத்தில் விற்பனைக்கு நெக்ஸா ஷோரூம் வழியாக வெளியாகவுள்ளது.

அடுத்த சில நாட்களுக்குள் பலேனோ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கிராஸ்ஓவர் ரக மாருதி ஃபிரான்க்ஸ் விற்பனைக்கு வெளியாக உள்ளதை தொடர்ந்து ஜிம்னி காரும் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் வரவுள்ளது. ஐந்து கதவுகள் கொண்ட புதிய மாருதி சுசூகி ஜிம்னியை அதிகாரப்பூர்வ முன்பதிவு நடைபெற்று வருகின்றது. ஆன்லைனில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நெக்ஸா ஷோரூம் வாயிலாக முன்பதிவு செய்ய ரூ.25,000 கட்டணமாக செலுத்த வேண்டும்.

maruti jimny airbag

Maruti Suzuki Jimny

210 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்று லேடர் பிரேம் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஜிம்னி எஸ்யூவி காரில் மாருதி சுசூகியின் 1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். இந்த காரில் கியர்பாக்ஸ் விருப்பங்களில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் பெற்றிருக்கும்.

ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற வகையில் சுசூகியின் AllGrip Pro 4WD சிஸ்டத்துடன் மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளுடன் குறைந்த ரேஞ்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

jimny AllGrip Pro 4WD

More Auto News

kia ev3 suv
இந்தியா வரவுள்ள கியா EV3 எஸ்யூவி காரின் முக்கிய சிறப்புகள்
புதிய 2025 ஹோண்டா அமேஸ் டீசர் வெளியானது
சென்னையில் ரூ.700 கோடி முதலீட்டில் பேட்டரி ஆலையை நிறுவும் ஹூண்டாய்
ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் முக்கிய விபரம்
விரைவில்., புதிய ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது

ஜிம்னி எஸ்யூவி காரில்  Zeta மற்றும் Alpha என இரண்டு வேரியண்டுகளில் மட்டுமே கிடைக்கிறது. இதில் ஆறு ஏர்பேக்குகள், பிரேக் லிமிடெட் ஸ்லிப் டிஃபெரன்ஷியல், ரிவர்ஸ் கேமரா, ESP மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.

கிரானைட் கிரே, பேர்ல் ஆர்க்டிக் ஒயிட், நெக்ஸா ப்ளூ, ப்ளூயிஷ் பிளாக், சிஸ்லிங் ரெட் உடன் கருப்பு நிற ரூஃப் மற்றும் கைனெடிக் மஞ்சள் உடன் பிளாக் ரூஃப் என மொத்தமாக 7 நிறங்களில் இரண்டு டூயல் டோன் கொண்டுள்ளது.

Jimny Zeta 1.5-litre petrol MT/AT 

  • ஸ்டீல் சக்கரங்கள்
  • மின்சாரத்தில் இயங்கும் விங் கண்ணாடிகள்
  • 7.0 அங்குல தொடுதிரை வசதி
  • Smartplay Pro இன்ஃபோடெயின்மென்ட்
  • 4 ஸ்பீக்கர் பெற்ற ஆடியோ சிஸ்டம்
  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே
  • ரியர் டிஃபோகர்
  • கலர் MID டிஸ்பிளே
  • பவர் விண்டோஸ்
  • ரிவர்ஸ் கேமரா
  • சீட்பெல்ட் ப்ரீடென்ஷனர்கள்
  • பிரேக் லிமிடெட் டிஃபெரன்ஷியல்
  • ISOFIX குழந்தை இருக்கைகள்
  • ESP (எலெகட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம்)
  • 6 காற்றுப்பைகள்

maruti suzuki jimny dashboard

Jimny Alpha 1.5-litre petrol MT/AT

ஜெட்டா வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாறுபட்ட வசதிகள்

  • பாடி நிறத்திலான கதவு கைப்பிடிகள்
  • அலாய் வீல்
  • ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லேம்ப்
  • ஹெட்லேம்ப் வாஷர்கள்
  • மூடுபனி விளக்குகள்
  • என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப்
  • க்ரூஸ் கட்டுப்பாடு
  • ஏசி கட்டுப்பாடு
  • 9.0 அங்குல தொடுதிரை
  • Smartplay Pro+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • ஆர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம்

5 கதவுகளை பெற்ற மாருதியின் ஜிம்னி காரின் விலை ரூபாய் 12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மே முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. வரவிருக்கும் 5 கதவு மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி கார்களை எதிர்கொள்ளும்.

 

ரூ.2.48 லட்சத்தில் பஜாஜ் க்யூட் விற்பனைக்கு மஹாராஷ்டிராவில் வெளியானது
எக்ஸ்பல்ஸ் 200 சவால்.., 200 சிசி பைக்கை உருவாக்கும் ஹோண்டா
அறிமுகத்திற்கு முன்னர் நிசானின் மேக்னைட் பற்றி முக்கிய தகவல்கள்
ix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்
ஹூண்டாய் நிறுவனத்தின் இயான் கார் விற்பனை இந்தியாவில் நீக்கப்பட்டது
TAGGED:Maruti Suzuki Jimny
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 suzuki access 125
Suzuki
2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Suzuki V Strom SX
Suzuki
2025 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved