வரும் ஜூன் 7 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகின்ற மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி காரின் விலை ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 12 லட்சம் முதல் அமைந்திருக்கலாம். மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா கார்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாகும்.
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 30,000 க்கு அதிகமான முன்பதிவுகளை கடந்துள்ளது. ஆல்பா மற்றும் ஜெட்டா என இருவிதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது.
1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச பவர் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் பெற்றிருக்கும்.
ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற வகையில் சுசூகி காரின் AllGrip Pro 4WD சிஸ்டத்துடன் மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளுடன் குறைந்த ரேஞ்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மாருதி சுசூகி ஜிம்னி மைலேஜ் MT கியர்பாக்ஸ் 16.94 Kmpl மற்றும் AT மாடல் 16.39 Kmpl வழங்கும் என ARAI சான்றளித்துள்ளது.
ஆறு ஏர்பேக்குகள், பிரேக் லிமிடெட் ஸ்லிப் டிஃபெரன்ஷியல், ரிவர்ஸ் கேமரா, ESP மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.
கிரானைட் கிரே, பேர்ல் ஆர்க்டிக் ஒயிட், நெக்ஸா ப்ளூ, ப்ளூயிஷ் பிளாக், சிஸ்லிங் ரெட் உடன் கருப்பு நிற ரூஃப் மற்றும் கைனெடிக் மஞ்சள் உடன் பிளாக் ரூஃப் என மொத்தமாக 7 நிறங்களில் இரண்டு டூயல் டோன் கொண்டுள்ளது.