இந்தியாவில் மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி இன்று அறிமுகம்

லைஃப்ஸ்டைல் எஸ்யூவி மாடலாக விளங்குகின்ற 5 கதவுகளை பெற்ற ரூ.12.74 லட்சத்தில் மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி இன்றைக்கு விற்பனைக்கு வெளியாகின்றது. நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி என இரண்டையும் எதிர்கொள்ள உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2023 முதல் முன்பதிவு நடைபெற்று வருகின்ற ஜிம்னி காருக்கு இதுவரை 30,000க்கு மேற்பட்ட ஆர்டர்களை பெற்றுள்ளதாக மாருதி சுசூகி உறுதிப்படுத்தியுள்ளது. நெக்ஸா ஷோரூம் மூலம் Zeta மற்றும் Alpha என இரண்டு வேரியண்டுகளில் மட்டுமே கிடைக்கிறது.

Maruti Suzuki Jimny

மிக சிறப்பான ஆஃப்ரோடு அனுபவத்தை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஜிம்னி எஸ்யூவி காரில் 1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் வசதி கொண்டதாக பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச பவர் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

ஜிம்னி எஸ்யூவி காரின் மேனுவல் வேரியண்ட் மைலேஜ் 16.94 Kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 16.39 Kmpl வழங்கும் என ARAI சான்றளித்துள்ளது.

ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற வகையில் சுசூகி AllGrip Pro 4WD சிஸ்டத்துடன் மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளுடன் குறைந்த ரேஞ்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், பிரேக் லிமிடெட் ஸ்லிப் டிஃபெரன்ஷியல், ரிவர்ஸ் கேமரா, ESP மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.

கிரானைட் கிரே, பேர்ல் ஆர்க்டிக் ஒயிட், நெக்ஸா ப்ளூ, ப்ளூயிஷ் பிளாக், சிஸ்லிங் ரெட் உடன் கருப்பு நிற ரூஃப் மற்றும் கைனெடிக் மஞ்சள் உடன் பிளாக் ரூஃப் என மொத்தமாக 7 நிறங்களில் இரண்டு டூயல் டோன் கொண்டுள்ளது.

மாருதி ஜிம்னி எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.12.74 லட்சம் முதல் ரூ.15.05 லட்சம் வரை உள்ளது.

This post was last modified on June 7, 2023 5:13 AM

Share