வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய எஸ்யூவி Escudo அல்லது Victoris என்ற பெயரில் எதிர்பார்க்கப்படும் நிலையில் மாருதியின் அரினா ஷோரூம்களில் விற்பனைக்கு வரவுள்ளதால் க்ரெட்டா உட்பட பல்வேறு போட்டியாளர்களை எதிர்கொள்ள உள்ளது.
குறிப்பாக தற்பொழுது சந்தையில் உள்ள பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா என இரு மாடல்களுக்கு நடுவில் நிலைநிறுத்தப்பட உள்ள புதிய எஸ்யூவி விக்டோரிஸ் மாடலில் பெட்ரோல், ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி என இரு ஆப்ஷன்களை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது சந்தையில் கிடைக்கின்ற கிராண்ட் விட்டாராவில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் எஞ்சினை பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதனால், மிக சிறப்பான மைலேஜ் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக சிஎன்ஜி ஆப்ஷனை பெற உள்ள இந்த புதிய எஸ்யூவி பின்புற பூட்ஸ்பேஸ் வழங்கும் வகையில் சிஎன்ஜி டேங்க் ஆனது அடிப்பகுதியில் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்டீரியரில் கிராண்ட் விட்டாராவை போல 9 அங்குல ஸ்மார்ட்பிளே ப்ரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்பு ஆகியவற்றை பெறக்கூடும். கூடுதலாக பாதுகாப்பு சார்ந்தவற்றில் 6 ஏர்பேக்குகளுடன் மற்ற ESP, ஹீல் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்டவற்றுடன், தற்பொழுது வரும் பெரும்பாலான கார்களில் உள்ள ADAS சார்ந்த பாதுகாப்பினை பெறும் முதல் மாருதி மாடலாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
மேலதிக விபரங்கள் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி எதிர்பார்க்கப்படுகின்றது.