Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

₹ 2.55 கோடியில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 400d விற்பனைக்கு அறிமுகமானது

by MR.Durai
8 June 2023, 10:48 am
in Car News
0
ShareTweetSend

Mercedes-Benz G 400d

முந்தைய G350d மாடலுக்கு மாற்றாக இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 400d ஆடம்பர ஆஃப்ரோடு எஸ்யூவி ஏஎம்ஜி லைன் மற்றும் அட்வென்ச்சர் எடிஷன் என இரண்டு விதமாக விற்பனைக்கு ரூ.2.55 கோடி விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

G400d மாடலுக்கான முன்பதிவு கட்டணம் 1.50 லட்சம் ஆக வசூலிக்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் விநியோகம் துவங்கப்பட உள்ளது.

Mercedes G 400d

தொடர்ந்து மெர்சிடிஸ் G 400d மாடல் பாரம்பரிய லேடர் ஃபிரேம் சேஸ் கட்டுமானத்தால் தயாரிக்கப்பட்டு அதன் ஆஃப்-ரோடு டிரைவிங் ஏற்ற சிறப்பு G-மோட் பெற்றதாக உள்ளது. இதன் 241மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 700மீட்டர் வரை நீர் உள்ள இடங்களில் பயணிக்கும் திறனை பெற்றுள்ளது.

3.0-லிட்டர், OM656, இன்-லைன் ஆறு-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 330hp பவர், மற்றும் 700Nm டார்க் வெளிப்படுத்துகின்று. 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் பவர்  நான்கு சக்கரங்களுக்கும் செல்லுகின்றது. G 400d 0-100kph வேகத்தை எட்டுவதற்கு 6.4 வினாடிகள் போதுமானதாகும்.

G 400d AMG மாடலில்  20-இன்ச் மல்டி-ஸ்போக் அலாய் வீல் மற்றும் AMG ஸ்டைலிங் குறிப்புகளைப் பெறுகிறது. இது ஸ்லைடிங் சன்ரூஃப், பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 64 வண்ண ஆம்பியன்ட் விளக்குகள் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

அட்வென்ச்சர் எடிஷன் மாடலில் 18-இன்ச், 5-ஸ்போக் சில்வர் அலாய் வீல், ரூஃப் ரேக் மற்றும் ஸ்பேர் வீல் ஹோல்டர், நீக்கக்கூடிய ஏணி, டெயில்கேட் பொருத்தப்பட்ட முழு அளவிலான டயர் மற்றும் நப்பா லெதருடன் கூடிய மல்டி-ஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றுடன் வருகிறது.

Related Motor News

No Content Available
Tags: Mercedes-Benz G 400d
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

carens clavis price

காரன்ஸ் கிளாவிஸ் EVல் புதிய வேரியண்டுகளை வெளியிட்ட கியா

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

மேக்னைட்டில் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனிலும் சிஎன்ஜி வெளியிட்ட நிசான்

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

மேம்படுத்தப்பட்ட லெக்சஸ் LM 350h இந்தியாவில் அறிமுகம்

ரூ.64.90 லட்சத்தில் புதிய மினி JCW கன்ட்ரிமேன் All4 இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

புதிய நிறங்களில் 2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan