மெர்சிடிஸ் பென்ஸ் V கிளாஸ் எம்பிவி அறிமுக தேதி விபரம்

வரும் ஜனவரி 24ந் தேதி பிரீமியம் சந்தையில் மிக நேர்த்தியான வடிவமைப்புடன் ஆடம்பர வசதிகளை பெற்ற எம்பிவி மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் V கிளாஸ் விளங்க உள்ளது. சர்வதேச அளவில் பென்ஸ் V கிளாஸ் 2014 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகின்றது.

ஜெர்மனி நாட்டை விட ஸ்பெயின் நாட்டில் உற்பத்தி செலவினங்கள் குறைவு என்பதனால் ஸ்பெயினில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல் முழுமையான வடிவமைக்கப்பட்ட மாடலாக இந்திய சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.  GLE SUV மாடலில் இடம்பெற்றிருக்கின்ற எல்இடி முகப்பு விளக்கை பெற்று , மூன்று ஸ்லாட் கொண்ட கிரிலை பெற்றதாக பாக்ஸ் வடிவத்தில் அமைந்தள்ள இந்த எம்பிவி மிக தாரளமான இடவசதியை பெற்றதாக விளங்குகின்றது.

இந்த கார் மிக தாரளமான இடவசதியுடன் 2+2+2, 2+2+3 அல்லது 2+3+3  என மூன்று வகையான இருக்கை அமைப்பினை கொண்டுள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள மாடல் இருக்கை விபரம் குறித்த தகவல் இல்லை.  மேலும் என்ஜின் குறித்தான தகவல் வெளியாகவில்லை.

சர்வதேச அளவில் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்றதாக விளங்கும் வி கிளாஸ் மாடலில் 194PS மற்றும் 400 Nm டார்க் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் V கிளாஸ் எம்பிவி கார் எதிர்பார்க்கப்படும் விலை ரூ. 75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)