Automobile Tamilan

எம்ஜி ஆஸ்டர் எஸ்யூவி பிளாக்ஸ்டார்ம் விற்பனைக்கு வெளியானது

mg astor blackstorm

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஆஸ்டர் எஸ்யூவி அடிப்படையில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிளாக்ஸ்டார்ம் எடிசன் ரூ.14.48 லட்சம் முதல் ரூ. 15.77 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரு விதமான என்ஜினை பெறும் ஆஸ்டரில் 110 ஹெச்பி பவர் மற்றும் 150 என்எம், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும், சக்திவாய்ந்த 140 ஹெச்பி பவர் மற்றும் 220 என்எம், 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் 6 வேக  ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

MG Astor Blackstorm

ஆஸ்டர் பிளாக்ஸ்டார்ம் எடிசன் ஆனது 110 ஹெச்பி பவர் மற்றும் 150 என்எம், 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் மட்டும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. மேனுவல் மற்றும் சிவிடி என இரண்டிலும் வரவுள்ளது.

சிறப்பு பிளாக்ஸ்டார்ம் ஆஸ்டரின் சிறப்பம்சங்கள் முன்புற கிரில் முழுக்க கருப்பு நிற தேன்கூடு மாதிரியான கிரில், சிவப்பு நிறத்தினை பெற்ற முன்புற பிரேக் காலிப்பர்களுடன் கூடிய கருப்பு நிற அலாய் வீல், கருப்பு நிற ஃபினிஷ்ட் ஹெட்லேம்ப், கருப்பு ரூஃப் ரெயில்கள் மற்றும் கதவு அலங்காரம் மற்றும் முன் ஃபெண்டர்களில் ‘பிளாக்ஸ்டார்ம்’ பேட்ஜ் உள்ளது.

உட்புறத்தில், ஆஸ்டரில் சிவப்பு நிற தையல் கொண்ட டக்செடோ பிளாக் அப்ஹோல்ஸ்டரி, சிவப்பு நிறத்தை பெற்ற ஏசி வென்ட், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு முழு-கருப்பு தரை பெறுகிறது.

Variant Ex-showroom price
MG Astor Blackstorm MT Rs. 14,47,800
MG Astor Blackstorm CVT Rs. 15,76,800

Exit mobile version