எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், கருப்பு நிறத்தை பெற்ற குளோஸ்டெர் பிளாக் ஸ்ட்ரோம் எடிசன் மாடலை 6 மற்றும் 7 இருக்கைகளுடன் விற்பனைக்கு ₹ 40.29 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்புப் பதிப்பான Gloster Blackstorm மாடலில் 2WD மற்றும் 4WD வகைகளிலும் 6 & 7 இருக்கைகள் கொண்டதாகவும் கிடைக்கிறது.
163 ஹெச்பி பவர் மற்றும் 375 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பெற்றிக்கின்றது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் பெற்று 218 ஹெச்பி பவர் மற்றும் 480 என்எம் டார்க் வெளிப்படுத்துகிற 2.0 லிட்டர் ட்வீன் டர்போ டீசல் இன்ஜின் உள்ளது. இதிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள், ORVM மற்றும் கதவு பேனல்கள் போன்ற இடங்களில் சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது. கருப்பு நிறத்தை முழுமையாக கொண்டுள்ளது. கருப்பு அப்ஹோல்ஸ்டரி மற்றும் டாஷ்போர்டு சென்டர் கன்சோல் பட்டன்கள், சிவப்பு நிற தரை விரிப்பு, சிவப்பு செருகல்கள் மற்றும் சிவப்பு ஆம்பியன்ட் விளக்குகள் என பலவற்றை பெற்றதாக வந்துள்ளது.
MG Gloster Blackstorm Price:
6-Seater 2WD Diesel Rs. 40.29 Lakhs
7-Seater 2WD Diesel Rs. 40.29 Lakhs
6-Seater 4WD Diesel Rs. 43.07 Lakhs
7-Seater 4WD Diesel Rs. 43.07 Lakhs
All prices, ex-showroom