Skip to content

எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் விலை ரூ.40,000 வரை உயர்வு

mg hector 2023

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் மற்றும் 6, 7 இருக்கை பெற்ற ஹெக்டர் பிளஸ் என இரண்டு எஸ்யூவி கார்களின் விலையும் அதிகபட்சமாக ரூ.40,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்றது.

MG Hector and Hector plus Price hiked

எம்ஜி ஹெக்டர் மாடலில் உள்ள ஸ்டைல், ஷைன், ஸ்மார்ட், ஸ்மார்ட் ப்ரோ, ஷார்ப் ப்ரோ மற்றும் சேவி ப்ரோ ஆகிய ஆறு வகைகளில் கிடைக்கிறது. ஸ்டைல் வேரியண்ட் ரூ. 27,000, ஷைனுக்கு ரூ.31,000, ஸ்மார்ட் மற்றும் ஷார்ப்பில் ரூ.35,000, ஷார்ப் ப்ரோவில் ரூ.40,000 வரை உயர்ந்துள்ளது.

ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் எஸ்யூவி காரில் 143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் சிவிடி கியர்பாக்ஸ் 8 வேக ஸ்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரு மோட்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர இந்த இன்ஜினில் 7 வேக டிசிடி ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கிடைக்கின்றது.

எம்ஜி ஹெக்டர் பிளஸ், மூன்று வரிசை எஸ்யூவியின் ஸ்டைல் வேரியன்டில் ரூ. 27,000, அதைத் தொடர்ந்து ஷைன் வேரியன்ட் ரூ. 31,000 அடுத்து ஸ்மார்ட் மற்றும் ஸ்மார்ட் EX விலை ரூ.35,000 அதிகம். டாப்-ஸ்பெக் ஸ்மார்ட் ப்ரோ மற்றும் ஷார்ப் ப்ரோ விலை ரூ.40,000 வரை உயர்வு பெறுகின்றன.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் போட்டியாளர்களாக ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டாடா ஹாரியர் மற்றும் நிசான் கிக்ஸ் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.