Skip to content

ஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்

எம்ஜி ஹெக்ட்ர்

ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விலை உயர்வை பெற்ற ஹெக்டர் எஸ்யூவி தொடர்ந்து முன்பதிவில் அசத்தி வருகின்றது. கடந்த மாதம் இறுதி முதல் தொடங்கப்பட்ட மறுமுன்பதிவின் மூலம் தற்பொழுது வரை 8,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் ஹெக்டர் விற்பனைக்கு வந்த மூன்று மாதங்களில் 6,134 கார்களை விநியோகம் செய்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு தொடங்கப்பட்டு 28,000 அதிகமான முன்பதிவை பெற்ற காரணத்தால், தற்காலிகமாக முன்பதிவு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஹெக்டருக்கான முன்பதிவு செப்டம்பர் 29ந் தேதி தொடங்கப்பட்டது. அதேநேரத்தில் இந்த மாடலுக்கான விலையை அதிகபட்சமாக ரூ.40,000 வரை இந்நிறுவனம் உயர்த்தியுள்ளது.

ஹெக்டர் என்ஜின் விபரம்

143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.

2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.

ஹெக்டர் எஸ்யுவி பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்), ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ மற்றும் பெட்ரோல் ஹைபிரிட் வேரியன்ட் மைலேஜ் லிட்டருக்கு 15.91 கிமீ ஆகும். எம்ஜி மோட்டாரின் ஹெக்டர் டீசல் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.41 கிமீ ஆகும்.

mg hector engine specs

எம்ஜி ஹெக்டர் விலை பட்டியல்

65e72 mg hector suv new price list