MG Hector: நமது நாட்டில் முதல் காரை எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம், எம்ஜி ஹெக்டர் (MG Hector) என்ற பெயரில் பல்வேறு சிறப்பு டெக் வசதிகள் கொண்ட எஸ்யூவி ரக மாடல் காராக அறிமுகம் செய்துள்ளது. ஹெக்டர் காருக்கான முன்பதிவு ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹலோல் தொழிற்சாலையில் வர்த்தகரீதியான உற்பத்தியை தொடங்கியுள்ள இந்நிறுவனம், தனது முதல் மாடலை ஜூன் மாத மத்தியில் விற்பனைக்கு கொண்டு வருகின்றது. முதற்கட்டமாக தற்போது 50 நகரங்களில் 120 டீலர்களை திறந்துள்ள எம்ஜி நிறுவனம், செப்டம்பர் மாத இறுதிக்குள் 130 டீலர்களாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் 250க்கு மேற்பட்ட டீலர்களை நாடு முழுவதும் தொடங்க உள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே பிராண்டிற்கான குஜராத் ஆலையை ரூ.2,200 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் நிறுவனம் புதுப்பித்துள்ளது.
முதற்கட்டமாக 5 இருக்கை கொண்ட எஸ்யூவி ரக மாடலாக விற்பனைக்கு வரவுள்ள ஹெக்டரின் 7 இருக்கை மாடல் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
ஹெக்டரின் என்ஜின்
1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் என இரு விதமான ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. BS4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டதாக வந்துள்ளது.
143hp குதிரைத்திறன் மற்றும் 250Nm இழுவைத்திறன் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது. டர்போ பெட்ரோல் என்ஜினில் மட்டும் 48V மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் வழங்க உள்ளது. மைல்ட் ஹைபிரிட் வசதி மூலம் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.
எம்ஜி ஹெக்டர் பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ ஆகும்.
ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அமைந்திருக்கும்.
எம்ஜியின் ஹெக்டர் எஸ்யூவியின் டீசல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.41 கிமீ ஆகும்.
பிரிவு | ஹெக்டர் பெட்ரோல் | ஹெக்டர் டீசல் |
என்ஜின் | 1.5 லிட்டர், டர்போ பெட்ரோல் | 2.0 லிட்டர் டர்போ டீசல் |
குதிரைத்திறன் | 143hp | 170hp |
டார்க் | 250Nm | 350Nm |
கியர்பாக்ஸ் | 6-speed MT/6-speed dual-clutch AT | 6-speed MT |
48V mild-hybrid | ஆப்ஷன் | – |
மைலேஜ் | லிட்டருக்கு 14.16 கிமீ/13.96 கிமீ AT | லிட்டருக்கு 17.41 கிமீ |
குறிப்பாக இந்த எஸ்யூவி காரில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் தற்போது வழங்கப்படவில்லை.
MG ஹெக்டரின் ஸ்டைல்
F-35 ரக விமானத்தின் தோற்ற உந்துதலை பின்னணியாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக மாடல் 4,655 மிமீ நீளம், 1835 மிமீ அகலம்,1760 மிமீ உயரம் மற்றும் 2750 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ள இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 192 மிமீ ஆகும். 587 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ஸ்பேஸ் இடம் பெற்றுள்ளது.
முகப்பு தோற்றத்தில் எல்இடி ரன்னிங் விளக்குகளுடன், புராஜெக்டர் ஹெட்லைட் யூனிட், ஸ்டார் ரைடர் என அழைக்கப்படுகின்ற நேர்த்தியான மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில் கொண்டு அற்புதமாக விளங்குகின்ற இந்த எஸ்யூவி காரில் 17 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது.
இன்டிரியர் அமைப்பில் நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டுள்ள ஹெக்டரில் குறிப்பாக 10.4 அங்குல அகலம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஓட்டுநருக்கான பல்வேறு தகவல்களை வழங்குகின்றது. பேனராமிக் சன் ரூஃப், 8 வண்ணங்களில் ஜொலிக்கும் மூட் லைட்ஸ் மற்றும் பவர் அட்ஜஸ்டபிள் இருக்கைகள் போன்றவற்றை பெற்றுள்ளது.
இன்டர்நெட் சிறப்புகள்
எம்ஜி iSMART எனப்படும் டெக் வசதி மூலம் ஏர்டெல் நிறுவன இ சிம் கார்டு ஆதரவுடன் முழுமையான ஸ்மார்ட் டெக் வசதிகளை பெற்ற முதல் இந்திய கார் மாடலாக இந்த எஸ்யூவி விளங்க உள்ளது. இந்த மாடலில் 5ஜி இணைய ஆதரவை பெறும் வகையில் அமைந்துள்ளது. M2M சிம் கார்டு என குறிப்பிடப்படும் மெஷின் டூ மெஷின் தொடர்பினை அதாவது கார்களுக்கு இடையிலான தொடர்பை ஏற்படுத்தும் திறன் பெற்ற காராக விளங்குகின்றது.
இந்த காரில் 19 வகையாக பிரத்தியேக சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்ற சுருக்கமாக காணலாம்.
அவசரகால E-Call சேவை எனப்படுவது 24/7 முறையில் செயல்படும் பல்ஸ் ஹப் சேவை, காரை சுற்றி 360 டிகிரி கோணத்தில் படம்பிடித்து காண்பிக்கும் கேமரா, 16 ஜிபி இன்டரனல் ஸ்டோரேஜ்,காரின் இருப்பிடத்தை அறிவது, காரினை குறிப்பிட்ட எல்லையைக் கடந்தால் எச்சரிக்கும் அமைப்பு, வேக எச்சரிக்கை போன்றவற்றுடன் சர்வீஸ் தகவல்களை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.
TomTom’s IQ நேவிகேஷன் சிஸ்டம், Gaana பிரீமியம் மியூசிக் ஸ்ட்ரீமிங் செயலி, AccuWeather செயலி உட்பட ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இணைப்பு அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் எனப்படும் அம்சங்களை உள்ளடக்கிய இந்த காரில் “Hello, MG” என்ற வார்த்தையுடன் இயக்கத்தை தொடங்கும் செயற்கை அறிவுத்திறன் மூலம் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆங்கில மொழி ஆதரவுடன் வழங்கியுள்ளது.
MG ஹெக்டர் எஸ்யூவி விலை எதிர்பார்ப்புகள்
ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் என நான்கு வேரியன்டுகளில் மொத்தமாக 13 வகையான வேரியன்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் வரவுள்ள இந்த எஸ்யூவி காரில் கருப்பு, சில்வர், வெள்ளை, கிளாஸ் ரெட் மற்றும் சிவப்பு என மொத்தம் 5 நிறங்களிலும் வரவிருக்கிறது.
இந்திய சந்தையில் பிரபலமாக விளங்குகின்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 500, டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் போன்ற மாடல்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்த வல்லதாக ஹெக்டர் விளங்க உள்ளது. புதிதாக விற்பனைக்கு வரவுள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கியா எஸ்பி எஸ்யூவி மாடலுக்கும் சவாலாகவும் அமைய உள்ளது.
ஜூன் மாதம் மத்தியில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக மாடல் விலை ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…