Categories: Car News

எம்ஜி காமெட் எலக்ட்ரிக் காரின் கேமர் எடிசன் டீசர் வெளியானது

mg comet ev gamer edition

வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் காமெட் எலக்ட்ரிக் காரில் சிறப்பு கேமர் எடிசன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளதை டீசர் வாயிலாக உறுதி செய்துள்ளது.

குறைந்த விலையில் வரவுள்ள இரண்டு கதவுகளை பெற்று 4 இருக்கை கொண்ட காமெட் மின்சார காரினை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 250 கிமீ வரை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

MG Comet Gamer Edition

காமெட் EV காரில் சுமார் 17.3 kWh மற்றும் 26.7 kWh திறன் கொண்ட பேட்டரி ஆப்ஷன் மூலம் இயக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலை குறைப்பதற்காக பேட்டரி உள்நாட்டில் மிகவும் நம்பகமான டாடா AutoComp நிறுவனத்தில் இருந்து பெறப்பட உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதால் பேட்டரி பேக் விபரம் உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

இருப்பினும், காமெட் இவி கார்  இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறக்கூடும். எனவே ரேஞ்ச் ஆனது 200 கிமீ (17.3kWh) முதல் 300 கிமீ (26.7kWh) வரையிலான ரேஞ்சை கொடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

இளம் வீடியோ கேம் பிரியர்களை இலக்காக கொண்ட ஸ்பெஷல் கேமர் பதிப்பு உட்பட பலவேறு வகைகளில் அறிமுகம் செய்யப்படலாம். இதற்காக இந்திய கேமர் நமன் மாத்தூரின் (MortaL – Naman Mathur) ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள காரின் டீசரை வெளியிட்டுள்ளது.

Recent Posts

மாருதி சுசூகி சிறப்பு எடிசனை கிராண்ட் விட்டாராவில் வெளியிட்டது

2 லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா எட்டியதை தொடர்ந்து ஸ்டைலான அதிகாரத்தை குறிக்கும் வகையில்…

5 hours ago

அக்டோபர் 17ல்.., இந்தியாவில் கவாஸாகி KLX 230 S அறிமுகமாகிறது..!

சமீபத்தில் கவாஸாகி இந்தியா வெளியிட்டுள்ள டீசர் மூலம் அனேகமாக இந்தியாவில் தயாரித்து கவாஸாகி வெளியிட உள்ள முதல் பொது சாலைகளில்…

5 hours ago

530கிமீ ரேஞ்சு.., BYD ‘eMax 7’ எலெக்ட்ரிக் எம்பிவி விற்பனைக்கு வெளியனது

6 மற்றும் 7 இருக்கைகளை கொண்டுள்ள பிஓய்டி நிறுவனத்தின் eMax 7 எலெக்ட்ரிக் எம்பிவி மாடலில் 55.4kwh மற்றும் 71.8Kwh…

7 hours ago

ரூ.4.50 லட்சத்தில் பிஎம்டபிள்யூ CE02 எலெக்ட்ரிக் அறிமுகமானது

அதிகப்படியான பேனல்கள் இல்லாமல் எளிமையான வடிவமைப்பினை பெற்று அர்பன் பயன்படுகளுக்கு ஏற்ற வகையில் 108 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் பிஎம்டபிள்யூ…

3 days ago

புதிய வேரியண்ட் ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் டைகனில் அறிமுகமானது

ஃபோக்ஸ்வேகன் இந்தியா விற்பனை செய்து வருகின்ற டைகன் மற்றும் விர்டஸ் எ இரு மாடல்களிலும் தொடர்ந்து பல்வேறு கூடுதல் வசதிகள்…

3 days ago

2024 நிசான் மேக்னைட் காரின் வேரியண்ட் வாரியான வசதிகள்

65க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2024 நிசான் மேக்னைட் எஸ்யூவி காரில் தற்பொழுது Visia, Visia+,Acenta,…

3 days ago