ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் வெளியிட்டுள்ள புதிய வின்ட்சர் இவி காரில் ஒரு சிறப்பு பேட்டரி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது எந்தவொரு இந்திய மாடலிலும் இது போன்ற ஒரு பேட்டரி வாடகை (BAAS – Battery As A Service)முறையானது பயணிகள் வாகனங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இந்த திட்டம் செயல்பட்டு வருகின்றது.
Battery As A Service என்ற திட்டத்தின் நோக்கமே வாடிக்கையாளர்கள் முழுமையான கட்டணத்தை பேட்டரிக்கும் சேர்த்து செலுத்தாமல் அடிப்படையான காருக்கு மட்டும் கட்டணத்தை செலுத்தி காரினை வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகப்படியான கட்டணத்தை வாங்கும் பொழுது செலுத்த தேவையில்லை பயன்பாட்டிற்கு மட்டும் பேட்டரியை ஒவ்வொரு கிலோமீட்டருக்கு பயன்படுத்தும் பொழுது மட்டும் 3.50 காசுகள் செலவு செய்ய வேண்டியிருக்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.
தோராயமாக வின்ட்சர் இவி (அக்டோபர் 2க்கு முன்பாக முழுமையான விலை சார்ந்த ஒப்பீடு வரும்) காருக்கான முழுமையான கட்டணம் 15 லட்சம் ரூபாய் வருகின்றது என்றால் அதற்கு பதிலாக வெறும் 10 லட்ச ரூபாயில் நீங்கள் காரை வாங்கிக் கொள்ளலாம் மாதம் ஆயிரம் கிலோ மீட்டர் பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ 3.50 காசுகள் என்றால் 3,500 மற்றும் சார்ஜிங் கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு சராசரியாக ஒரு ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட 4,500 ரூபாயில் ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளும் பொழுது வாடிக்கையாளர்களுக்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் ஒரு ஆண்டுக்கு தனது ehub எம்ஜி சேவையின் மூலம் இலவச சார்ஜிங் அனுமதிக்கின்றது.
மேலும் முதல் வாடிக்கையாளருக்கு அதாவது ஃபர்ஸ்ட் ஓனருக்கு வாழ்நாள் முழுவதுமான லைப் டைம் பேட்டரி வாரண்டியை இந்நிறுவனம் வழங்குகின்றது. அடுத்து மூன்று வருடங்கள் அல்லது 45,000 கிமீ பயணித்திருந்தால் வாகனத்தை 60% விலையில் திரும்ப பெற்றுக் கொள்வதாக இந்நிறுவனம் பை பேக் உத்தரவாதத்தை வழங்குகின்றது.
வின்ட்சர் இவி காரில் 38Kwh பேட்டரி பொருத்தப்பட்டு சிங்கிள் சார்ஜில் 338 கிமீ பயணிக்கலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எம்ஜி வின்ட்சர் இவி விலை ரூபாய் 9.99 லட்சம்+ 1 கிலோ மீட்டருக்கு 3.50 வசூலிக்கப்படுகிறது. முழுமையான விலை பட்டியல் அக்டோபர் இரண்டாம் தேதிக்கு முன்பாக வெளியாகும்.