எம்ஜி மோட்டார் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி அமைந்த பிறகு வெளியான வின்ட்சர் EV, ப்ரோ காரில் மிகவும் தாராளமான இடவசதியை பெற்று ரூ.14.40 லட்சம் முதல் ரூ.19.56 லட்சம் வரை ஆன்-ரோடு விலை அமைந்துள்ளது.
வின்ட்சர் இவி மாடலில் பேட்டரி வாடகை திட்டம் மற்றும் முழுமையான விலையில் வாங்கும் வழக்கமான முறை என இரண்டு விதமாக கிடைக்கின்றது.
Excite, Exclusive மற்றும் Essence என மூன்று விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்ற இந்த எலெக்ட்ரிக் காரில் 38kwh LFP பேட்டரியை பொருத்தப்பட்டு 136PS அல்லது 100KW பவர் வழங்கும் PMSM மோட்டார் ஆனது 200 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 331 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Essence Pro என்ற டாப் வேரியண்டில் 52.9kwh LFP பேட்டரியை பொருத்தப்பட்டு 136PS அல்லது 100KW பவர் வழங்கும் PMSM மோட்டார் ஆனது 200 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 449 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம். இந்த மாடல் V2V, V2L, லெவல் 2 ADAS ஆகியவற்றை பெற்றுள்ளது.
Sport, Normal, Eco மற்றும் Eco+ என நான்கு விதமான டிரைவ் மோடுகளை பெற்றுள்ள காரின் 38Kwh உண்மையான ரேஞ்ச் சராசரியாக 250 முதல் 270 கிமீ வரை வழங்கும், 52.9kwh மாடல் 380-400 கிமீ வரை என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாடலுக்கு இந்தியாவில் நேரடியாக போட்டியை ஏற்படுத்த டாடா நெக்ஸான் இவி மற்றும் மஹிந்திரா XUV 400 EV ஆகியவற்றை எதிர்கொள்கிறது.
2025 எம்ஜி வின்ட்சர் இவி, புரோ விலை பட்டியல்
Variants | Ex-showroom price | Ex-showroom with BaaS | Battery rental cost with Baas |
Excite | Rs. 14 lakh | Rs. 9.99 lakh | Rs. 3.9/km |
Exclusive | Rs. 15 lakh | Rs. 10.99 lakh | Rs. 3.9/km |
Essence | Rs. 16 lakh | Rs. 11.99 lakh | Rs. 3.9/km |
Essence Pro 52.9kwh | Rs. 17.50 lakh | Rs. 12.49 lakh | Rs. 4.5/km |
பேட்டரியுடன் கூடிய முறையில் ஆன்ரோடு விலை
- Windsor EV Excite – ₹ 15.05 லட்சம்
- Windsor EV Exclusive – ₹ 16.02 லட்சம்
- Windsor EV Essence – ₹ 17.03 லட்சம்
- Windsor EV Pro Essence 52.9kwh – ₹ 19.55 லட்சம்