நாளை மே 6ஆம் தேதி எம்ஜி மோட்டாரின் புதிய பிரிமீயம் வெர்ஷன் வின்ட்சர் புரோ இவி (Windsor pro EV) மாடல் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் பேட்டரி 52.9Kwh பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 449 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் என இந்நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளதை நான் முதல் முறையாக உறுதி செய்கின்றோம்.
ஏற்கனவே சந்தையில் மிகவும் பிரபலமாக விளங்கி வருகின்ற வின்ட்சர் ப்ரோ மாடலானது விற்பனைக்கு வந்த நாள் முதல் தற்பொழுது வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் புதிதாக வரவுள்ள பேட்டரி அதிகம் பெற்ற வேரியண்ட் ஆனது கூடுதல் ரேஞ்ச் மற்றும் பல்வேறு சிறப்பு வசதிகள் பெற்றுள்ளதால் மேலும் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
52.9kWh பேட்டரி கொண்ட மாடலில் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 449 கிமீ (ARAI) வரை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, உண்மையான ரேஞ்ச் ஈக்கோ மோடில் 380-400 கிமீ என எதிர்பார்க்கலாம்.
V2V, V2L, லெவல் 2 ADAS பாதுகாப்பு வசதி ஆகியவற்றுடன் சிறிய அளவிலான டிசைன் மாற்றத்தை கொண்ட அலாய் வீல் ஹெக்டரில் உள்ளதை போன்றே அமைந்திருக்கின்றது.
புதிய வின்ட்சர் இவி புரோ ஆரம்ப விலை ரூ.20 லட்சத்துக்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் பேட்டரி வாடகை திட்டம் (BAAS) முறையிலும் கிடைக்கலாம்.