அசரடிக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி.., 2300 முன்பதிவை அள்ளிய எம்ஜி இசட்.எஸ் இ.வி.

zs ev suv

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி காராக வரவுள்ள இசட்.எஸ். சிங்கிள் சார்ஜில் 340 கிமீ ரேஞ்சுடன் வந்துள்ள காரின் விலை ரூபாய் 22 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி 23 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ளது.

டிசம்பர் 21 முதல் ஜனவரி 17 ஆம் தேதியுடன் முன்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் 2,300 புக்கிங் பெற்று அசத்தியுள்ளது. இந்தியாவில் இந்நிறுவனம் வெளியிட்ட முதல் மாடலான ஹெக்டர் இணையம் சாரந்த பல அம்சங்களை பெற்ற காராக வெளிவந்த சந்தையில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்த மாடலில் 44.5 Kwh பேட்டரி பேக்குடன் கூடிய மின்சார மோட்டார் அதிகபட்சமாக 143 hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm டார்க் வழங்குவதுடன், அதிகபட்சமாக 340 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 8.5 விநாடிகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காருக்கு இணை விருப்பமாக 7.4 Kw சார்ஜர் வழங்குவதுடன் 15 amp வீட்டு முறை சார்ஜ் செய்யலாம். இந்த பேட்டரியை 7 kW AC சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும் போது அதிகபட்சமாக 7 மணி நேரமும், 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 80 சதவீத சார்ஜிங்கை வெறும் 40 நிமிடங்களில் எட்டிவிடும் திறனை கொண்டிருக்கும்.

ரூ. 22 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற MG ZS EV உரிமையாளர்களுக்கு 5 ஆண்டு / வரம்பற்ற கிமீ உற்பத்தியாளர் உத்தரவாதம், லித்தியம் அயன் பேட்டரிக்கு 8 ஆண்டு / 1,50,000 கிமீ உத்தரவாதமும் இலவசமாக வழங்கப்படும். இஷீல்ட் 5 வருட காலத்திற்கு 24×7 சாலையோர உதவிகளையும் (RSA) உள்ளடக்கியது. தனி நபர் பயன்பாட்டுக்கு வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்

Exit mobile version