சிட்ரோயன் இந்தியாவின் 2.0 திட்டத்தின் கீழ் ஏற்கனவே C3 X வெளியாகியுள்ள நிலையில், அடுத்து பாசால்ட் X கூபே வரவுள்ளதை உறுதி செய்து வெளியிடப்பட்டுள்ள டீசரில் பல்வேறு நவீன வசதிகளை குறிப்பாக இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் கொண்டு வரவுள்ளது.
பட்ஜெட் விலை அமைந்துள்ள பாசால்டில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்படுவதனால் வாடிக்கையாளர்கள் பீரிமியம் வசதிகளை பெறுவதுடன், மேம்பட்ட அனுபவத்தை பெறுவார்கள். எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துவதுடன், ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
சி3எக்ஸ் போல இந்த மாடலில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் , ஏபிஎஸ் உடன் இபிடி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட்கள், TPMS, ஹாலோ 360-டிகிரி கேமரா, எஞ்சின் இம்மொபைலைசர், எஞ்சின் புஸ் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல் வசதி, ஆட்டோ-டிம்மிங் இன்சைட் ரியர்வியூ மிரர், வேக உணர்ந்து செயல்படும் ஆட்டோ டோர் லாக்குகள், அதிவேக எச்சரிக்கை அமைப்பு & பெரிமெட்ரிக் அலாரம் போன்றவை பெற்றுள்ளது.
குறிப்பாக வெளிப்புறத்தில் சிறிய அளவிலான ஸ்டைலிங் மேம்பாடுகளை பெற்றிருக்கும் நிலையில், இன்டீரியரில் பல்வேறு மேம்பாடுகளுடன் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதனால் டேஸ்போர்டு, இருக்கைகள் பீரிமியமாக காட்சிக்கு கிடைக்கலாம்.
தற்பொழுது பாசால்ட் எக்ஸ் மாடலுக்கு முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் விலை அறிவிக்கப்பட உள்ளது. புதிய சிட்ரோயன் 2.0 திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் டீலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது.