Categories: Car News

e6 இனிமேல் BYD eMax 7 என அழைக்கப்படும்..!

byd emax 7 teased

இந்தியாவில் BYD நிறுவனம் தனது இ6 மாடலை புதிய இமேக்ஸ் 7 என்ற பெயரில் விற்பனைக்கு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனா உள்ளிட்ட சந்தைகளில் இந்த மாடல் சமீபத்தில் M6 ஃபேஸ்லிஃப்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்திய சந்தைக்கு புதிய பெயரானது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

‘BYD eMAX 7’ என்ற பெயர் BYD நிறுவனத்தின் மின்சார வாகன வரிசையில் முன்னேற்றத்தின் உச்சத்தை குறிக்கிறது. பெயரில் உள்ள ‘e’ என்பது வாகனத்தின் சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மையை வலியுறுத்தும் மின்சார வாகனம் என்பதனை குறிக்கிறது. ‘MAX’ என்பது முந்தைய BYD e6 மாடலில் இருந்து மேம்பட்ட செயல்திறன், ரேஞ்ச் மற்றும் அம்சங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  வாகனத்தில் உள்ள ‘7’ ஆனது முந்தைய e6 மாடலின் அடுத்த தலைமுறை என்பதனை குறிக்கும் வகையில் ஏழு என்ற எண்ணை பெற்றுள்ளதால் ‘BYD eMAX 7’ என்ற பெயர் அழைக்கப்படுவதாக பிஓய்டி தெரிவித்துள்ளது.

தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாறுதல்கள் கூடுதலான டெக் மற்றும் பல்வேறு நவீன வசதிகள் சேர்க்கப்பட்ட இன்டீரியர் கொண்டிருக்கும்.

அதிகாரப்பூர்வமாக eMax 7 பெயர் உறுதி செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் இந்த மாடலில் முந்தைய மாடலை விட மிக சிறப்பான பேட்டரி ஆனது கொடுக்கப்பட்டு அதிகப்படியான ரேஞ்ச் ஆனது வழங்கப்படும் எனது எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச சந்தைகளில் இரண்டு விதமான பேஷை ஆப்ஷன் கிடைத்து வருகின்றது. இந்திய சந்தையில் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வருகின்ற மாடல்களில் ஒற்றை 71.8Kwh பேட்டரி மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதால் இதே ஆப்ஷனை தொடர்ந்து வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

204hp பவர் மற்றும் 310Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 71.8Kwh பேட்டரி கொண்ட மாடல் சிங்கிள சார்ஜில் 530 கிமீ வெளிப்படுத்தலாம். சிறிய பேட்டரியை பெறுகின்ற சில நாடுகளில் 420 கிமீ ரேஞ்ச் வழங்கும் 55.4kWh பேட்டரி பேக் 163hp பவர் மற்றும் 310Nm டார்க் வழங்குகின்றது.

புதிய BYD eMax 7 எலெக்ட்ரிக் எம்பிவி விலை ரூ. 29.50 லட்சத்தில் துவங்கலாம்.