சிட்ரோயன் இந்தியாவின் புதிய “Citroën 2.0 – Shift Into the New” செயல் திட்டத்தின் முதல் மடாலாக பரீமியம் வசதிகளுடன் சர்வதேச சந்தையில் கிடைக்கின்ற C3X கூபே ஸ்டைலின் பல்வேறு ஸ்டைலிங் அம்சங்கள், வசதிகள் பாதுகாப்பு சார்ந்த மேம்பாட்டினை பெற்றிருக்கும் என்பதனை உறுதி செய்யும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஸ்டெல்லாண்டிஸ் அறிவித்த செயல்திட்டத்தின் படி விற்பனையில் உள்ள சி3, ஏர்கிராஸ் மற்றும் பாசால்ட் மேம்படுத்துவதுடன் டீலர்கள் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. கூடுதாலாக ஜீப் மற்றும் சிட்ரோன் பிராண்டுகள் ஒரே டீலர்களில் விற்பனையை துவங்கியுள்ளது.
Citroen C3X எதிர்பார்ப்புகள்
பாசால்டில் உள்ள அதே டர்போ எஞ்சினை பகிர்ந்து கொள்ள உள்ள சி3எக்ஸில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பெற்றிருக்கலாம்.
தோற்ற அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட முன்பக்க கிரில், புதிய மேம்படுத்தப்பட்ட ஹெட்லைட் உடன் கூடுதலாக புதிய டூயல் டோன் அலாய் வீல் என பலவற்றை பெற்றிருக்கும், கூடுதலாக புதிய நிறங்களை கொண்டிருக்கலாம்.
இன்டீரியரில் அதிக வசதிகள் எதிர்பார்க்கப்படும் நிலையில் 360 டிகிரி கேமரா, மேம்பட்ட புதிய லெதேரேட் இருக்கைகள், டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் மேம்பட்ட 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளை பெற்றிருப்பதுடன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறக்கூடும்.
ஜியோ-ஃபென்சிங், ரிமோட் லாக் / அன்லாக் மற்றும் ரிமோட் எஞ்சின் ஸ்டார்ட் வசதிகளை பெற்றிருக்கலாம்.
6 ஏர்பேக்குகளுடன் அடிப்படையாக பெற்று ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ரியர் பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.
தற்பொழுது விற்பனையில் உள்ள பாசால்ட் ரூ.8.16 லட்சம் முதல் ரூ.10.19 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆக கிடைப்பதனால், பிரீமியம் வசதிகளை பெற்ற c3X விலை ரூ.11 லட்சத்துக்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.