பெர்ஃபாமென்ஸ் ரக ஹூண்டாய் ஐயோனிக் 5 N எலக்ட்ரிக் கார் அறிமுகமானது

Hyundai Ioniq 5 n

ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ள 650 hp பவரை வெளிப்படுத்தும் பெர்ஃபாபென்ஸ் ஐயோனிக் 5 N எலக்ட்ரிக் காரின் அதிகபட்ச வேகம் 260kph ஆக உள்ளது. இந்திய சந்தைக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.

அறிமுகம் செய்யப்பட்டுள்ள Ioniq 5 N காரின் ரேன்ஜ், டார்க் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இரண்டு எலக்ட்ரிக் மோட்டார் பெற்றுள்ளது.

Hyundai Ioniq 5 N

ஹூண்டாய் Ioniq 5 N காரில் வழங்கப்பட்டுள்ள 84kWh பேட்டரி ஆனது மிக சிறப்பான ரேன்ஜை வழங்கக்கூடும். இந்த காரில் உள்ள இரண்டு எலக்ட்ரிக் மோட்டார் மூலம் அதிகபட்சமாக 21,000rpm-ல் 609hp ஒட்டுமொத்தமாக வழங்கும், கூடுதலாக இடம்பெற்றுள்ள N Grin பூஸ்ட் மோட் பயன்படுத்தினால் 650hp வரை வெளிப்படுத்தும்.

0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.4 வினாடிகளும், அதிகபட்ச வேகம் 260kph ஆக உள்ள இந்த காரின் டார்க் விபரம் அறிவிக்கப்படவில்லை. 350kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி 18 நிமிடங்களில் பேட்டரியை 10-80 % சார்ஜ் செய்யலாம் என ஹூண்டாய் கூறுகிறது.

பெட்ரோல் மாடலை போலவே  N e-shift மற்றும் N Active Sound + என்ற இருவகையிலான டிரைவிங் அனுபவத்தை இந்த எலக்ட்ரிக் காரும் வழங்கும்.

விற்பனையில் உள்ள சாதாரன மாடலை விட மிக ஸ்டைலிஷான மாற்றங்களை கொண்டுள்ள ஐயோனிக் 5 என் காரில் 21 அங்குல அலுமினிய அலாய் வீல் கொண்டு முன்புறத்தில் நான்கு பிஸ்டன், 400 மிமீ டிஸ்க் மற்றும் ஒரு பிஸ்டன், 360 மிமீ பின்புற டிஸ்க் பிரேக் உள்ளது.

ஹூண்டாய் Ioniq 5 N மாடலை 2024 ஆம் ஆண்டில் இந்தியாவிற்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், முழுமையாக இறக்குமதி செய்யப்படும் என்பதால், Ioniq 5 N விலை கூடுதலாக இருக்கும்.