Categories: Car News

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

2024 Kia Carnival car rear

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில் வெளியிட உள்ளது உறுதி செய்யும் வகையில் டீசரை வெளியிட்டு இருக்கின்றது.

முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள கார்னிவல் மாடலில் 7, 9, மற்றும் 11 என மூன்று விதமான இருக்கை ஆப்சனில் சர்வதேச அளவில் கிடைத்த வருகின்றது. இந்திய சந்தைக்கு வரவுள்ள மாடல் இருக்கை, எஞ்சின் குறித்த எந்த தகவலும் தற்போது இல்லை.

சர்வதேச அளவில் புதிய கார்னிவல் மாடலில் 3.5 லிட்டர் பெட்ரோல் வி6 எஞ்சின், 1.6 லிட்டர் ஹைபிரிட் பெட்ரோல் எஞ்சின் என இரண்டு பெட்ரோல் கூடுதலாக 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் என மூன்று ஆப்ஷன்களை கொண்டிருக்கின்றது.

வரவுள்ள மாடலில் 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் என இரட்டை பிரிவு கொண்டுள்ள இன்டிரியரில் பின்புற பயணிகளுக்கு தனியான பொழுதுபோக்கு சார்ந்த 14.6 இன்ச் HD டிஸ்பிளே உள்ளது. மிக அகலமான தொடுதிரை அமைப்பு, பல்வேறு கனெக்டிவிட்டி வசதிகள் உயர்தரமான பாதுகாப்பு அம்சங்கள், வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பரமான இருக்கைகளைக் கொண்டிருக்கும்.

முற்றிலும் வடிவமைக்கப்பட்ட மாடலாக வரவுள்ளதால் கியா கார்னிவல் விலை அனேகமாக ரூபாய் 45 லட்சத்திற்கும் கூடுதலாக துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.