Automobile Tamilan

மஹிந்திரா BE 6 Formula E காரின் வேரியண்ட் வாரியான முக்கிய சிறப்புகள்

mahindra be 6 formula e edition redஃபார்முலா E எனப்படுகின்ற மின்சார வாகனங்களுக்கான ரேசிங் டிசைனை தழுவிய BE 6 ஃபார்முலா E காரில் FE2, FE3  என இரு வேரிண்டுகளை பெற்றுள்ள நிலையில் எதை வாங்குவது லாபம்? என்ற குழப்பத்தை தீர்க்க எந்த வேரியண்டில் என்ன வசதிகள் உள்ளது என அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக ஒற்றை பேட்டரி ஆப்ஷன் 79Kwh பெற்றுள்ள ஃபார்முலா இ எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் 286hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 656 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ளது. சார்ஜருக்கான பொருத்துதல் கட்டணம் 7.2 kW சார்ஜருக்கு ₹50,000 கூடுதலாகவும் அல்லது 11.2 kW சார்ஜருக்கு ₹75,000 ஆகும்.

மற்ற அம்சங்களில் பொதுவாக ரேஸ் கார்களைப் போல பல்வேறு இடங்களில் பிரத்யேக பாடி கிராபிக்ஸ் ஒட்டப்பட்டுள்ளன. முன்புறத்தில் வழக்கமான மாடலை விட வேறுபட்ட வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ஒளிரும் “BE” லோகோ, ரியர் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ADAS சார்ந்த வசதிகள் இல்லை.

BE 6 Formula E FE2 விலை ரூ. 23.69 லட்சம்

பனோரமிக் கிளாஸ் ரூஃப், வெண்டிலேட்டட் சீட்கள், ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் மற்றும் 6 ஏர்பேக்குகள், 19 அங்குல அலாய் வீல்,  பிளைண்ட் வியூ மானிட்டருடன் கூடிய 360 டிகிரி கேமரா, அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஓட்டுநர் தூக்கத்தைக் கண்டறிதல், மின்னணு பார்க்கிங் பிரேக், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், டயர்-அழுத்த கண்காணிப்பு அமைப்பு (TPMS) உள்ளது.

BE 6 Formula E FE3 விலை ரூ. 24.49 லட்சம்

FE2 வசதிகளுடன் கூடுதலாக 20 அங்குல வீல், அடாப்ட்டிவ் சஸ்பென்ஷன் சிஸ்டத்துடன் கூடுதலாக படெல் விளக்குகள் உள்ளது.

எவரெஸ்ட் ஒயிட், ஃபயர்ஸ்டார்ம் ஆரஞ்சு, டேங்கோ ரெட் மற்றும் ஸ்டெல்த் பிளாக் ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கின்ற மாடலின் இன்டீரியரில் கருப்பு நிற தீம் கொடுக்கப்பட்டு, சில இடங்களில் ஆரஞ்சு நிற ஹைலைட்களுடன் ரேசிங் சார்ந்த சில அம்சங்களை சேர்க்கப்பட்டுள்ளன.

Exit mobile version