
மஹிந்திராவின் தார் ராக்ஸ் 5 டோர் வெற்றியை தொடர்ந்து 3 டோர் கொண்ட தார் காரில் பல்வேறு அம்சங்களை பிரீமியம் சார்ந்தவையாக மேம்படுத்துவதுடன் தொடர்ந்து ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக விளங்கும் வகையில் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் 1.5 லிட்டர் டீசல் , 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என மூன்றும் கிடைக்க உள்ளது. 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தற்பொழுதைய தார் மேம்படுத்தப்பட்ட பல வசதிகளுடன் வரவுள்ளது.
குறிப்பாக, இன்டீரியரில் தார் ராக்ஸ் மாடலில் இருந்து பெறப்பட்டு 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளேவுடன், மஹிந்திரா AdrenoX கனெக்ட்டிவிட்டி சார்ந்தவற்றுடன் மேம்பட்ட கன்சோலில் புதிய நிறங்களுடன் இருக்கைகள் என பலவும் மாற்றியமைக்கப்பட்டிருக்கும்.
குறிப்பாக ஸ்டீயரிங் வீல் ஆனது மற்ற மாடல்களில் இருந்து பெறப்பட்டு முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன், ஆட்டோ ஏசி மற்றும் வயர்லெஸ் சார்ஜர், காற்றோட்டமான முன் இருக்கைகள், 360 டிகிரி கேமரா ஆகியவற்றை கொண்டு ஆல் வீல் டிரைவ் மற்றும் ரியர் வீல் டிரைவ் என இரு ஆப்ஷனை கொண்டிருக்கும்.
வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் முன்பதிவு துவங்கப்பட்டு உடனடியாக டெலிவரி வழங்க வாய்ப்புள்ளது.