79வது சுதந்திர தினத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய விஷன் T எஸ்யூவி கான்செப்ட் நிலை மாடல் தார் எஸ்யூவியின் எதிர்கால மாடலாக அமைந்துள்ளது. 2027-2030க்குள் மஹிந்திரா வெளியிட உள்ள கார்களில் ஒன்றாக இந்த கான்செப்ட் விளங்கும்.
2023ல் வெளியிடப்பட்ட தார் எலெக்ட்ரிக் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட டிசைனை பெற்றுள்ள மஹிந்திரா விஷன் டி மாடல் NU_IQ architectureல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமான பாக்ஸி SUV தோற்றத்தை பெற்று தார் E கான்செப்ட்டுடன் ஒப்பிடும்போது பல டிசைன் மாற்றங்கள் மட்டுமல்லாமல் உற்பத்திக்கு எடுத்துச் செல்லும் வடிவமைப்பினை கொண்டதாகவும்,சதுர வடிவ LED விளக்கு நான்கு தனித்தனி LED பகல்நேர விளக்குகளை காணலாம்.
முன்புறத்தில் இழுவை கொக்கியுடன் கூடிய ஆஃப்-ரோடு பம்பருடன் பின்புற பகுதியில் சாமான்களை ஏற்றும் ரேக் மற்றும் கூரை கேரியர்களுக்கான ஹூக் புள்ளிகள் உள்ளன.
இன்டீரியரில் விஷன்.டி’ எழுத்துக்களுடன் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் டூயல் டோன் டேஸ்போர்டினை பெற்று 5 இருக்கைகளை கொண்டு பெரிய செங்குத்து தொடுதிரை டிஸ்பிளே வழங்கப்பட்டு, டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் அமைந்திருக்கின்றது.
இந்த மாடலும் பெட்ரோல், டீசல் , ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் ஆகியவற்றில் விற்பனைக்கு 2027ல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதவிர மஹிந்திரா நிறுவனம் விஷன் எக்ஸ், விஷன் எஸ்எக்ஸ்டி மற்றும் விஷன் எஸ் ஆகியவற்றை இன்றைக்கு வெளியிட்டுள்ளது.