Automobile Tamilan

புதிய டாடா நெக்ஸான்.இவி எஸ்யூவி பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

new tata nexon.ev suv

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான்.ev எஸ்யூவி காரை வெளியிட்டுள்ள நிலையில் புதிய பேட்டரி எலக்ட்ரிக் காரில் இடம்பெற்றிருக்கின்ற முக்கிய சிறப்பம்சங்களை தொகுத்து முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

முந்தைய மாடலை விட LR வேரியண்ட் சுமார் 28 கிமீ வரை ரேஞ்சு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றபடி பேட்டரியில் பெரிய மாற்றங்களை இல்லையென்றாலும் Gen 2 மின்சார மோட்டாரின் எடை 20 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது.

Tata Nexon.ev SUV

புதிய நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் தோற்ற வடிவமைப்பு முந்தைய மாடலை விட மாறுபட்டு முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட கர்வ் கான்செப்ட்டின் அடிப்படையிலான வடிவமைப்பினை முன் மற்றும் பின்புறத்தில் பெற்று பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் புதிய 16 அங்குல அலாய் வல் பெற்றுள்ளது.

முன்புற பம்பர் அமைப்பில் டாடா நெக்ஸான் எஸ்யூவி ICE மாடலுக்கு எலக்ட்ரிக் மாடலுக்கு வித்தியாசப்படும் வகையிலான கிரில் , பானெட்டின் கீழ் பகுதியில் எல்இடி பார் கொடுக்கப்பபட்டு, மத்தியில் டாடா லோகோ உள்ளது. பகல்நேர ரன்னிங் லேம்ப் உடன் கூடிய ஸ்பிலிட் ஹெட்லேம்ப் கொண்டுள்ளது மற்றும் கீழே உள்ள பிரதான ஹெட்லேம்ப் கிளஸ்டர் முழுமையான எல்இடி ஆக உள்ளது.  காரை பூட்டும்போது/திறக்கும்போது இரு முனைகளிலும் உள்ள எல்இடி லைட் பார் வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷனைக் காட்டுகின்றன. பின்புற பம்பரில் உள்ள ஸ்கிட் பிளேட்டிலும் கோடுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக தோற்ற அமைப்பு முந்தைய மாடலை விட பெரிய அளவில் மேம்பாடுகளை டிசைனில் பெற்றுள்ளது.

இன்டிரியர்

நெக்ஸான்.இவி காரின் இன்டிரியார் ஆனது முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட நிறங்கள் கொண்டு அசத்தலான கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று டாப் வேரியண்டில் 12.3 அங்குல டிஸ்பிளே உள்ளது.

சென்டர் கன்சோலில் HVAC பெற தொடுதல் மூலம் உணர்ந்து செயல்படும் சுவிட்ச் கண்ட்ரோல் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பழைய காரின் ரோட்டரி கியர் மாற்றப்படு வழக்கமானதாக மாற்றப்பட்டுள்ளது. நெக்ஸான் EV காரில் உள்ள புதிய இரண்டு ஸ்போக் பெற்ற ஸ்டீயரிங் வீல் கொண்டு மையத்தில் ஒளிரும் வகையில் டாடா லோகோவைப் பெறுகிறது. OTT இயங்குதளங்களை ஸ்ட்ரீம் செய்ய டாடாவின் புதிய Arcade.ev ஆப்ஸ் தொகுப்பும் உள்ளது.

க்ரீயோட்டிவ் +, ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ்+, ஃபியர்லெஸ்+ S, எம்பவர்டூ மற்றும் எம்பவர்டூ+ என 6 வேரியண்டுகளை நெக்ஸான்.இவி பெற்றுள்ளது.

நெக்ஸான்.இவி பேட்டரி பவர் மற்றும் ரேஞ்சு

முந்தைய மாடலை விட 35 Nm வரை டார்க் குறைக்கப்பட்டுள்ள நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் Long Range (LR) வேரியண்டுகளில் காரின் பவர் 142 bhp மற்றும் 215Nm டார்க் வழங்குகின்ற மின்சார மோட்டாருக்கு 40.5kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 465 கிமீ பயணிக்கலாம்.

10% – 100% ஏறுவதற்கு வீட்டிலுள்ள AC சார்ஜரை கொண்டு சார்ஜ் செய்யும் பொழுது 15 மணி நேரம், 7.2 Kwh சார்ஜரை பயன்படுத்தினால் 6 மணிநேரம், 30KWh DC சார்ஜரை பயன்படுத்தினால் 10% – 80% ஏறுவதற்கு 56 நிமிடங்கள் மட்டும் போதும்.

Medium Range (MR) வேரியண்டில் 30 KWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 128 ஹெச்பி பவர் மற்றும் 215 Nm டார்க் வெளிப்படுத்தும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகளும், 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிவிடும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 325 கிமீ ரேஞ்சு தரவல்லதாக ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

10% – 100% ஏறுவதற்கு வீட்டிலுள்ள AC சார்ஜரை கொண்டு சார்ஜ் செய்யும் பொழுது 10 மணி நேரம் 50 நிமிடங்களும், 7.2 Kwh ஏசி சார்ஜரை பயன்படுத்தினால் 4 மணி நேரம் 30 நிமிடங்களும்,  30KWh DC சார்ஜரை பயன்படுத்தினால் 10% – 80% ஏறுவதற்கு 56 நிமிடங்கள் மட்டும் போதும்.

நெக்ஸான்.இவி டாப் ஸ்பீடு 150KMPH ஆக உள்ளது. இந்த மாடலுக்கு போர்ட்டபிள் சார்ஜர், 7.2kWh AC சார்ஜர் மற்றும் 30KWh வரை ஆதரிக்கின்ற DC ஃபாஸ்ட் சார்ஜர் உள்ளிட்ட சார்ஜிங் விருப்பங்களும் வழங்குகின்றது.

அடுத்து, மிக முக்கியமாக டாடா நெக்ஸான்.இவி காரில் V2L எனப்படுகின்ற முறையில் பவர் பெற 3.3 KVA இயலும், V2V என்ற முறையில் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்தை சார்ஜ் செய்ய 5 KVA பெற இயலும்.

குறிப்பாக நெக்ஸான் எலக்ட்ரிக் காரில் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் ,  6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இஎஸ்பி, ISOFix இருக்கை, 360 டிகிரி கேமரா மானிட்டர், சீட் பெல்ட் ரிமைன்டர், பார்க்கிங் அசிஸ்ட், பிளைன்ட் வியூ மானிட்டர், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரெஷர் மானிட்டர் வசதிகளுடன் வந்துள்ளது.

Z Connect மூலம் பல்வேறு டெலிமேட்டிக்ஸ் அம்சங்களை பெறுவதுடன் சார்ஜிங் இன்டிகேட்டர், 4 ஸ்பீக்கர், 4 ட்வீட்டர் மற்றும் 1 சப்வூஃபர், 360 டிகிரி கேமரா, முன் பார்க்கிங் சென்சார், ஏர் ப்யூரிஃபையர் ஆட்டோமேட்டிக் IRVM, காற்றோட்டம் வசதி கொண்ட லெதேரேட் இருக்கை, 60:40 பின் இருக்கை வசதி மற்றும் இரண்டாவது வரிசைக்கான ஆர்ம்ரெஸ்ட் போன்றவற்றுடன் 12.3-இன்ச் தொடுதிரை அமைப்பு மற்றும் SOS அழைப்பு ஆகியவை உள்ளது.

டாடா நெக்ஸான்.ev எஸ்யூவி மாடலுக்கு 3 ஆண்டு அல்லது 1,25,000 கிமீ வாரண்டியும்,  பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 8 ஆண்டுகள் அல்லது 1,60,000 கிமீ வாரண்டியையும் வழங்குகிறது. ரூ.21,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு முன்பதிவு நடைபெறுகின்ற நிலையில் விற்பனைக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Exit mobile version