Automobile Tamilan

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

tata safari dark

டாடா மோட்டார்சின் மேம்படுத்தப்பட்ட புதிய சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரின் 2023 மாடலின் விலை ரூ.16.49 லட்சம் முதல் ரூ.25.49 லட்சம் வரை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு ஆப்ஷனை பெறுகின்றது.

குளோபல் NCAP கிராஷ் சோதனைகளின் முடிவில் சஃபாரி மற்றும் ஹாரியர் என இரண்டும் 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளும், வயதுவந்தோர் பாதுகாப்பில் 34 புள்ளிகளுக்கு 33.05 பெற்றுள்ளது. ஸ்மார்ட் (O), ப்யூர் (O), அட்வென்ச்சர், அட்வென்ச்சர்+, அட்வென்ச்சர்+ A, அக்காம்பலிஸ்டு மற்றும் அக்காம்பலிஸ்டு+ ஆகியவற்றுடன் கூடுதலாக டார்க் எடிசன் மாடல் என மொத்தமாக 8 விதமான வகைகளில் கிடைக்கின்றது.

Tata Safari facelift

அதிகபட்சமாக 3,750 rpm-ல் 170 hp பவரை வழங்குவதுடன், 1,750-2,500 rpm-ல் 350Nm டார்க் வழங்கும் 2.0 லிட்டர் Kyrotec 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜினில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

சஃபாரி காரில் மேனுவல் கியர்பாக்ஸ் அதிகபட்சமாக மைலேஜ் 16.30kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் 14.50kmpl வெளிப்படுத்துகின்றது.

சஃபாரி தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான பம்பர் மற்றும் ஏர்டேம் வென்ட் மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு, பானெட் கீழ்பகுதியில் எல்இடி பார் லைட் பெற்றிருக்கின்றது.

பாடி நிறத்திற்கு ஏற்ற டிசைன் இன்ஷர்ட்ஸ் கொண்டுள்ள மாடல் இன்ஃபோடெயின்மென்ட் ஃப்ரீ-ஸ்டாண்டிங் முறையில் வழங்கப்பட்டு பேஸ் வேரியண்டில் 10.25-இன்ச் மற்றும் டாப் வேரியண்டுகளில் 12.3-இன்ச் ஆக உள்ளது.

தொடுதிரை மூலம் செயல்படுகின்ற HVAC சுவிட்சுகள் கொண்டு சஃபாரி காரில் 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு மிக நேர்த்தியாக உள்ளது. பல்வேறு வசதிகளை வழங்கும் கிளஸ்ட்டர் உள்ளது. மற்ற வசதிகளில், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், 10-ஸ்பீக்கர் ஜேபிஎல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் மாடலுக்கு க்விக் ஷிஃப்டர், பின்புற சாளர சன்ஷேடுகள் உள்ளன.

அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் டாடா சஃபாரி காரில் 360 டிகிரி கேமரா, மற்றும் ADAS சூட் ஆகியவையும் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது 7 ஏர்பேக்குகளைப் பெறும் நிலையில் பொதுவாக அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக் உள்ளன.

New Tata Safari Price list

 

Exit mobile version