புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார் 2021-ல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி கார் பல்வேறு மாற்றங்களை பெற்றதாக டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கனெக்ட்டிவிட்டி வசதிகளைக் கொண்டிருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபன்ஸ்டெர் எஸ்யூவி தோற்ற பின்னணியாகக் கொண்டு வடிவமைக்கப்பட உள்ள புதிய எக்ஸ்யூவி 500 மாடல் தயாரிப்பில் ஃபோர்டு நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகின்றது. எனவே, புதிய மாடலில் இடம்பெற உள்ள வசதிகள் பற்றி வெளியான சில தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

மஹிந்திராவின் வழக்கமான பாரம்பரிய கிரில் அமைப்பினைக் கொண்டிருப்பதுடன் மிகவும் மாறுபட்ட பம்பர் அமைப்பில் தட்டையான எல்இடி ஹெட்லைட் உடன் இணைந்த நீட்டிக்கப்பட்ட செங்குத்தான எல்இடி ரன்னிங் விளக்கினை கொண்டிருக்கும். பக்கவாட்டினை பொறுத்தவரை உயரமான வீல் ஆர்ச்சு மற்றும் டைமன்ட் கட் அலாய் வீல் உடன் டோர் ஹேண்டிலுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பாப் அவுட் முறையிலான அம்சத்தைப் பெற உள்ளது.

இன்டிரியரில் மிகவும் அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெறுவதுடன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளும், டிஜிட்டல் கிளஸ்ட்டரை கொண்டிருக்கும்.

எக்ஸ்யூ 500 காரில் 190 ஹெச்பி பவர் மற்றும் 380 என்எம் டார்க் வழங்கவல்ல 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டூ என்ஜினுடன் வரக்கூடும். அடுத்ததாக 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படலாம்.

இந்த மாடலின் அடிப்படையில் ஃபோர்டு நிறுவனம் ஒரு எஸ்யூவி காரை மஹிந்திரா அறிமுகத்திற்குப் பின்னர் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஒரே பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டாலும் மாறுபட்ட தோற்ற வடிவமைப்பினை கொண்டிருக்கும்.

தற்போது விற்பனையில் கிடைக்கின்ற மாடலின் அடிப்படையில் பிஎஸ்6 என்ஜினை பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விரைவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

Exit mobile version