1 கிமீ-க்கு 29 பைசா.., நிசான் Magnite பராமரிப்பு பேக்குகள் அறிமுகம்

3c872 nissan magnite suv

நிசான் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய Magnite எஸ்யூவி காருக்கு பிரத்தியேகமான சர்வீஸ் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. கோல்டு மற்றும் சில்வர் என இரண்டு சர்வீஸ் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

மேக்னைட் எஸ்யூவி காருக்கு அடிப்படையான வாரண்டி 2 வருடங்கள் அல்லது 50,000 கிமீ வழங்கப்படுகின்றது. கூடுதலாக நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஒன்று முதல் மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கலாம். நீட்டிக்கப்படுகின்ற மூன்று வாரண்டியுடன் 1,00,000 கிமீ வரை பெற ரூ.13,668 கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது.

முறையான திட்டமிட்ட கால பராமரிப்பு பேக்குகளை கோல்டு அல்லது சில்வர் என இரு விதமான ஆப்ஷன்களில் வழங்குகின்றது. சில்வர் பேக்கில் அடிப்படையான பாராமரிப்பு வழங்கப்படுகின்ற நிலையில், கோல்டு பேக்கில் அடிப்படையான பராமரிப்பு உட்பட  கால பராமரிப்பு (periodic maintenance service) ஆகியவை வழங்கப்படுகின்றது.

5 வருடங்கள் மற்றும் 50,000 கிமீ வரை பராமரிக்க கட்டணமாக கோல்டு பேக்கேஜ் திட்டத்திற்கு 22 சதவீதம் வரை சலுகை வழங்குகின்றது. கோல்டு கேர் பேக்கிற்கு ரூ.17,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணமில்லாமல் 90 நிமிடங்களில் மிக விரைவான மற்றும் விரிவான சேவை அனுபவத்தை வழங்க  ‘நிசான் எக்ஸ்பிரஸ் சேவையையும்’ அறிமுகப்படுத்தியுள்ளது. டீலர்ஷிப்களிடமிருந்தும், கூடுதல சலுகையாக ‘பிக்-அப் & டிராப்-ஆஃப்’ சேவைகளை வழங்கி வருகிறது.

மேலும் படிக்க – நிசான் Magnite எஸ்யூவி விலை உட்பட சிறப்புகள்

Exit mobile version