நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் எஸ்யூவி காரில் கூடுதலாக டீலர்கள் வாயிலாக சிஎன்ஜி ஆப்ஷனை பொருத்திக் கொள்ளும் வகையிலான வசதியை ரூ.75,000 வரை கூடுதல் கட்டணத்தில் ரூ.6.89 லட்சம் முதல் ரூ.10.02 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியானது.
முதற்கட்டமாக டெல்லி-என்சிஆர், ஹரியானா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா மற்றும் கர்நாடகா என 7 மாநிலங்களில் மட்டும் துவங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் படிப்படியாக விரிவுப்படுத்தப்படலாம்.
மேக்னைட் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு சிஎன்ஜி பொருத்துதல் மோட்டோசென் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது, மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற ஃபிட்மென்ட் மையங்களில் நிறுவப்படுகின்றது. CNG ஃபிட்மென்ட்டுடன் 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ உத்தரவாதம் தரநிலையாக உள்ளது.
இரண்டாம் கட்டத்தில், டீலர்-நிலை சிஎன்ஜி பொருத்துதல் இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என நிசான் தெரிவித்துள்ளது.
இந்த மாடலுக்கு போட்டியாக சந்தையில் ரெனால்ட் கிகர் சிஎன்ஜி, எக்ஸ்டர், பஞ்ச் உள்ளிட்ட மாடல்கள் கிடைக்கின்றது.