நிசான் இந்தியா தனது கார்களின் விலையை வரும் ஜனவரி 1, 2026 முதல் 3 % வரை அதாவது ரூ.17,000 முதல் ரூ.32,000 வரை உயர்த்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாகனத் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யும் மேக்னைட் மற்றும் எக்ஸ்-ட்ரெய்ல் ஆகிய கார்களின் விலைகள் உயரவுள்ளன.
இதன் விலை வேரியண்ட்டிற்கு ஏற்ப சுமார் ரூ. 17,000 முதல் ரூ. 32,000 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 5.62 லட்சத்தில் தொடங்குகிறது. விலை உயர்வுக்குப் பின் இது சுமார் ரூ. 5.79 லட்சமாக மாறக்கூடும்.
மேலும் வருட இறுதியை கொண்டாடும் வகையில், மேக்னைட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ. 1.36 லட்சம் வரை (ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகைகள் உட்பட) சேமிக்கலாம்.

