Site icon Automobile Tamilan

ஹூண்டாய் AH2 முன்பதிவுகள் வரும் அக்டோபர் 10 திறக்கப்படும்

ஹூண்டாய் AH2 ஹாட்ச்பேக் கார்களின் அதிகாரப்பூர்வ புக்கிங் வரும் அக்டோபர் 10ம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, கார் தயாரிப்பாளர் வரும் அக்டோபர் 9ம் தேதி இந்த காருக்கான பெயரை அறிவித்தால், இந்த காரின் அறிமும் வரும் அக்டோபர் 23ம் தேதி இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வரவாக உள்ள என்ட்ரி லெவல் ஹாட்ச்பேக் AH2 கார்கள் சான்ட்ரோ கார்களை தொடர்ந்து வெளியிடப்படுவதுடன், இந்திய மார்க்கெட்டில் இயான் கார்களுக்கு மாற்ற இருக்கும் என்று தெரிகிறது.

இயான் கார்களுக்கு மாற்றாக இருப்பது மட்டுமின்றி, இயான் கார்கள் பிஎ பிளாட்பாரம்மை அடிப்படையாக கொண்டது. புதிய ஹூண்டாய் AH2 (புதிய ஹூண்டாய் சான்ட்ரோ 2018) கார்களின் டிசைன்கள் நிறுவனத்தின் HA ஆரக்கிடெக்சர்கள் ஹூண்டாய் ஐ10 கார்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் AH2 கார்களின் பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரை, டூயல் ஏர்பேக்ஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஆண்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம்களுடன் வழக்கமான ஹாட்ச்பேக்களும் இடம் பெற்றுள்ளது.

ஹூண்டாய் AH2 காரின் இன்டீரியர்களில், இயான் காரை விட அதிக வசதிகள் கொண்டதாக இருக்கும். மேலும் இதில் டச்ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் மற்றும் குவாலிட்டி சீட்கள் பட்டுள்ளது. டஷ்போர்ட்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, சென்ட்ரல் கன்சோலில், பேசிக் கண்ட்ரோல்லேஅவுட்களுடன் ஆம்பர் கலர் இலுமினிநேசனை கொண்டுள்ளது. இதில் இரண்டு அனலாக் டயல்கள் இடம் பெற்றுள்ளன. இவை, சிறிய MID, டெக்கோமீட்டர் மற்றும் ஸ்பீடா மீட்டர்களாகும்.

ஹூண்டாய் AH2 காரின் இன்ஜினை குறித்த விபரங்களை ஹூண்டாய் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இந்த் காரின் பெயர் ஸ்மார்ட் ஆட்டோ என்று AMT கியர் பாக்ஸ் ஆப்சன்களுடன் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version