ரூ.6.18 லட்சத்தில் ரெனோ ட்ரைபர் ஏஎம்டி விற்பனைக்கு வந்தது

d660c renault triber amt

இந்தியாவின் பட்ஜெட் விலை 7 சீட்டர் எம்பிவி மாடான ரெனோ ட்ரைபர் காரில் இப்போது ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள மேனுவல் கியர்பாக்சினை விட ரூ.40,000 வரை கூடுதலாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ட்ரைபர் காரில் இடம்பெற்றுள்ள 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக கிடைக்கின்றது. கூடுதலாக தற்போது 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் (Easy R-AMT) பெறுகின்றது.

டாப் வேரியண்டில் 8 அங்குல தொடு திரை  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்  ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உட்பட யூஎஸ்பி வாயிலாக வீடியோ பிளே செய்யும் ஆப்ஷனை வழங்கியுள்ளது. ஓட்டுநருக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 அங்குல எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர், எரிபொருள் அளவு, உட்பட என்ஜின் வெப்பம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

ட்ரைபர் ஏஎம்டி மாடல் RxL, RxT மற்றும் RxZ போன்றவற்றின் அடிப்படையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடலை விட ரூ.40,000 உயர்த்தப்பட்டுள்ளது.

Renault Triber AMT Price

Triber RXL AMT – ரூ. 6.18 லட்சம்
Triber RXT AMT – ரூ.. 6.68 லட்சம்
Triber RXZ AMT – ரூ. 7.22 லட்சம்

( ex-showroom India)

Exit mobile version